மாற்று விவசாயத்தால் குறைகிறது நெல் சாகுபடி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாற்று விவசாயத்தால் குறைகிறது நெல் சாகுபடி

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 மாற்று விவசாயத்தால் குறைகிறது நெல் சாகுபடி

ஆனைமலை:ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், நடப்பாண்டும் நெல் சாகுபடி பரப்பு, ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறைந்துள்ளது.பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணையில் இருந்து, ஆனைமலை ஒன்றிய பகுதிகளுக்கு, நெல் சாகுபடிக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. போதியளவு தண்ணீர் கிடைப்பதால், மாவட்டத்தில் ஆனைமலையில் மட்டுமே நெல் சாகுபடி பரப்பு அதிகமுள்ளது.ஆண்டுதோறும், குறுவை மற்றும் சம்பா பட்டத்தில் தலா, 2,717 ஏக்கர் என, இரு போகத்தில் மொத்தம், 5,434 ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்தது.மழையின்றி கடும் வறட்சி நிலவியதால், அணையில் இருந்து, 2016ம் ஆண்டு முதல் போகமான குறுவை பட்டத்துக்கு மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டது. அதேபோல், கடந்தாண்டு, சம்பா பட்டத்துக்கு மட்டுமே தண்ணீர் கிடைத்தது.கடந்த இரண்டு ஆண்டுகளாக, இரு போகத்துக்கு பதிலாக ஒரு போகம் மட்டுமே, நெல் சாகுபடி செய்யப்பட்டது.தொடர் வறட்சி, நஷ்டம், காலதாமதமாக கிடைக்கும் பாசன நீர் உள்ளிட்ட காரணங்களால், நெல் விவசாயிகள் மானாவாரி மற்றும் தென்னை விவசாயத்துக்கு மாறி வருகின்றனர்.வாழ்வாதாரத்தை காக்க பெருமளவு விவசாயிகள், மாற்று விவசாயத்துக்கு மாறுவதால், ஆண்டுதோறும் நெல் சாகுபடி பரப்பு கணிசமாக குறைந்து வருகிறது. கடந்தாண்டு, சம்பா பட்டத்தில், 1,680 ஏக்கர் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்பட்டு, ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி பரப்பு குறைந்தது.நடப்பாண்டு பருவ மழை பொழிவு அதிகமாக இருந்ததால், ஆழியாறு அணையில் இருந்து குறுவை பட்டம் சாகுபடிக்கு, ஜூலை மாதம் தண்ணீர் வழங்கப்பட்டது. முதல் போகத்துக்கே தண்ணீர் கிடைத்ததால், நடப்பாண்டு சாகுபடி பரப்பு அதிகரிக்குமென எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில், கடந்த வாரம் வேளாண் துறையினர் நெல் சாகுபடி பரப்பை ஆய்வு செய்தனர். இதில், 1,590 ஏக்கர் மட்டுமே சாகுபடி நடந்துள்ளது கண்டறியப்பட்டது. ஒரு போகத்தில், 2,717 ஏக்கர் சாகுபடி செய்த நிலை மாறியுள்ளது. ஒரு போகத்தில், 1,100 ஏக்கர் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது ஊர்ஜிதமாகி உள்ளது. இதேநிலை நீடித்தால், எதிர்காலத்தில் ஆனைமலையில் நெல் சாகுபடி அரிதாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.ஆனைமலை வேளாண் அதிகாரிகள் கூறுகையில், 'குறுவை பட்டத்தில், நெல் சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து உள்ளது. நடப்பாண்டு பருவ மழைப்பொழிவு நன்றாக இருந்ததால், இரண்டாம் போகமான சம்பா பட்டத்தில் சாகுபடி பரப்பு வெகுவாக அதிகரிக்கும்.ஆனைமலை ஒன்றிய பகுதியில், நடப்பாண்டில், நெல் சாகுபடி பரப்பு பழைய நிலையை அடைய வாய்ப்பு உள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X