கழிவுநீர் குட்டையானது, 'ஹெலிபேடு'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கழிவுநீர் குட்டையானது, 'ஹெலிபேடு'

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 கழிவுநீர் குட்டையானது, 'ஹெலிபேடு'

சுற்றுப்பகுதியில் தொற்றுநோய் அபாயம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்காக அமைக்கப்பட்ட, 'ஹெலிபேடு' பகுதியில் கழிவு நீர் குட்டை போன்று தேங்கி நிற்பதால், தொற்றுநோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த, 2016 லோக்சபா தேர்தலின் போது, அப்போதை முதல்வர் ஜெயலலிதா, மாநிலம் முழுக்க, 'ெஹலிகாப்டரில்' பறந்து பிரசாரம் செய்தார். பொள்ளாச்சியில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த ஜெ., ெஹலிகாப்டர் தரையிறங்க, உடுமலை ரோட்டில் ஆர்.டி.ஓ., அலுவலகம் பின்பக்கம் தனியாருக்கு சொந்தமான இடத்தில், 'ஹெலிபேடு' அமைக்கப்பட்டது.அதன்பின், அந்த இடம் காலியாக விடப்பட்டதால், 'ெஹலிபேடு' அமைக்கப்பட்ட பகுதியை, அப்பகுதி குழந்தைகள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தனர். வாகனங்கள் ஓட்டி பழகுவோர் பயன்படுத்தினர். அந்த இடம் நகராட்சியின் எல்லையில் அமைந்துள்ளது.ஆனால், கடந்த ஒரு ஆண்டாக, மாக்கினாம்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான குடியிருப்பு பகுதிகளின் கழிவுநீர், கால்வாய் வழியாக கொண்டு வரப்பட்டு, 'ஹெலிபேடு' அமைந்துள்ள இடத்தில், குட்டை போன்று தேங்கி நிற்கிறது. இதனால், அங்குள்ள குடியிருப்பு பகுதி மக்கள், துர்நாற்றம், கொசுத் தொல்லையால் அவதிப்படுகின்றனர்.இது குறித்து, நகராட்சி மற்றும் மாக்கினாம்பட்டி ஊராட்சிக்கு பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. சமீப காலமாக, டெங்கு, பன்றி காய்ச்சல் பரவி, மக்கள் உயிரிழக்கும் நிலையில், கழிவுநீர் தேங்கி நோய்கள் பரவ வாய்ப்புள்ளல் மக்கள் அச்சப்படுகின்றனர்.கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண, தெற்கு ஒன்றிய அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் தீவிரம் காட்ட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X