மோசடி வழக்கில் தலைமறைவான ஜனார்த்தன ரெட்டி கைது?| Dinamalar

மோசடி வழக்கில் தலைமறைவான ஜனார்த்தன ரெட்டி கைது?

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பெங்களூரு:மோசடி வழக்கில் சிக்கி, தலைமறைவாக இருந்த, கர்நாடக முன்னாள் அமைச்சரும், பிரபல சுரங்க தொழிலதிபருமான, ஜி.ஜனார்த்தன ரெட்டி, பெங்களூரு போலீசாரிடம் சரணடைந்தார். இந்த மோசடி வழக்கில்அவர் கைது செய்யப்படலாம் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில், முந்தைய, பா.ஜ., தலைமையிலான அரசில் மாநில அமைச்சராக பணியாற்றியவர், பிரபல சுரங்க தொழிலதிபரான, ஜனார்த்தன ரெட்டி. பா.ஜ.,வில் மிகவும் வலிமையானவனாக திகழ்ந்து வந்தார்.கர்நாடகாவைச் சேர்ந்த, சையத் அஹமது பரீத் என்பவருடைய, 'ஆம்பிடென்ட் மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட்' என்ற நிதி நிறுவனம், அதிக வட்டி தருவதாக, பொதுமக்களிடம் இருந்து அதிக முதலீட்டைப் பெற்றது. ஆனால், பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்ததாக அந்த நிறுவனம் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளில் இருந்து அந்த நிறுவனத்தைக் காப்பாற்றுவதாக, பரீத்திடம், 20 கோடி ரூபாய் பேரம் பேசி, பணத்தை வாங்கியுள்ளார் ஜனார்த்தன ரெட்டி. போலீசார் நடத்திய விசாரணையில், இது தெரியவந்தது.அதையடுத்து, ஜனார்த்தன ரெட்டி மீது, மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், ஜனார்த்தன ரெட்டியிடம் விசாரிக்க, பெங்களூரு போலீசின், கிரைம் பிரிவு முயன்றது.ஆனால், ஜனார்த்தன ரெட்டி தலைமறைவாக இருப்பதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், பெங்களூர் போலீஸ் கிரைம் பிரிவில், ஜனார்த்தன ரெட்டி ஆஜரானார். அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. முன்னதாக, ஜனார்த்தன ரெட்டி பேசியதாக, ஒரு வீடியோ, பல்வேறு, 'டிவி'க்களில் வெளியானது.அதில் அவர் கூறியுள்ளதாவது:
அரசியல் போட்டியில், என் மீது பொய் புகார் கூறப்பட்டுள்ளது. நான் எந்த தவறும் செய்ய வில்லை. இந்த வழக்கின், எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கையில், என் பெயர் இல்லை.நான் தப்பி ஓடவும் இல்லை; தலைமறைவாகவும் இல்லை. பெங்களூரில்தான் உள்ளேன். ஆனால், தலைமறைவாக உள்ளதாக பொய் தகவல்கள் பரப்பப்பட்டன. ஆஜராகும்படி, 'நோட்டீஸ்' அனுப்பினர்; அதனால், நேரில் ஆஜராகி உள்ளேன்.
அரசியல் நெருக்கடிக்கு இடம் கொடுக்காமல், நேர்மையான முறையில் விசாரணை நடத்துவார்கள் என, போலீசார் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்பதற்காகவே, இந்த வீடியோவை வெளியிட்டுள்ளேன். என் மீது எந்தத் தவறும் இல்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதற்கிடையே, இந்த வழக்கில், பரீத் உள்ளிட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனார்த்தன ரெட்டியும் கைது செய்யப்படலாம் என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X