காத்திருப்போர் கூட மேற்கூரை சேதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காத்திருப்போர் கூட மேற்கூரை சேதம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 காத்திருப்போர் கூட மேற்கூரை சேதம்

மலைவாழ் மக்கள் திண்டாட்டம்

உடுமலை:மலையடிவாரத்தில் மலைவாழ் மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள, காத்திருப்போர் கூடத்தை சீரமைத்துத்தர வேண்டும் என, மலைவாழ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலையில், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பகுதிகளில் தளிஞ்சி, கோடந்துார், ஈசல்திட்டு, குழிப்பட்டி, மாவடப்பு மற்றும் குருமலை உள்ளிட்ட 14க்கும் மேற்பட்ட செட்டில்மென்ட் பகுதிகள் உள்ளன.மலைகளில் கிடைக்கும் தேன், காய்கள், பழங்கள் மற்றும் விளைவிக்கும் காய்கறிகள், தானியங்களை சமவெளி பகுதிகளுக்கு கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர்.இதற்கு, செட்டில்மென்ட் பகுதிகளுக்கு மலைவாழ் மக்கள் சென்று வரும் வகையில், மலையடிவாரம் வரையில் தார்ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி, ஈசல்திட்டு மக்களுக்கு கொங்குரார் குட்டையின் மலையடிவாரத்தில் பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டது. அதோடு, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 2.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காத்திருப்போர் கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.பஸ்சுக்கு உரிய வரவேற்பில்லாமல், நாளடைவில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனால், இக்கூடம் மலைவாழ் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.சமவெளிப்பகுதிகளிலிருந்து கொண்டு செல்லப்படும் அரிசி உள்ளிட்ட மளிகைப்பொருட்கள் மற்றும் மலையிலிருந்து விற்பனைக்காக எடுத்துவரப்படும் ஈச்சம்புற்கள், தானியங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், சில சமயங்களில் இரவு நேரங்களில் இங்கு தங்குகின்றனர்.தற்போது காத்திருப்போர் கூடத்தின் மேற்கூரை சேதமாகி, மழைக்காலங்களில் மழைநீர் உள்ளிறங்கும் நிலை காணப்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் தங்க முடியாத சூழலும், பொருட்களுக்கு பாதுகாப்பில்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது.சேதமடைந்து வரும் காத்திருப்போர் கூடத்தை சீரமைத்து தர வேண்டும் என, மலைவாழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X