பலத்த போலீஸ் பாதுகாப்புடன், 'திப்பு ஜெயந்தி' கொண்டாட்டம் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

பலத்த போலீஸ் பாதுகாப்புடன், 'திப்பு ஜெயந்தி' கொண்டாட்டம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 பலத்த போலீஸ் பாதுகாப்புடன், 'திப்பு ஜெயந்தி' கொண்டாட்டம்

பெங்களூரு: பலத்த எதிர்ப்பு, போராட்டங்களுக்கிடையே போலீஸ் பாதுகாப்புடன், மாநில அரசு, 'திப்பு ஜெயந்தி' கொண்டாடியது. பல இடங்களில் போராட்டம் நடத்திய, பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகா மாநில அரசு சார்பில், பெங்களூரு விதான்சவுதா பாங்குட் ஹாலில், திப்பு ஜெயந்தி நிகழ்ச்சி நடந்தது.


அனுமதி



இது வரை இல்லாத வகையில், அதிரடி படையின் பாதுகாப்பில் நிகழ்ச்சி நடந்தது.முதல்வர் குமாரசாமி கலந்து கொள்ளாமல், மூன்று நாட்கள் ஓய்வெடுக்க மைசூரு சென்று விட்டார். இதனால், துணை முதல்வர் பரமேஸ்வர், துவக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.ஆனால், அவர், வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்கு திடீரென சென்று விட்டதால் பங்கேற்கவில்லை. இதனால், நிகழ்ச்சியை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, அமைச்சர் சிவகுமார் துவக்கி வைத்தார். விதான் சவுதாவின் நான்கு கேட்களிலும், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அழைப்பிதழ் வைத்திருந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.


போராட்டம்



சித்ராதுர்காவில், மாவட்ட நிர்வாகம், போலீஸ் பாதுகாப்புடன் திப்பு ஜெயந்தி கொண்டாடியது. நிகழ்ச்சி அழைப்பிதழில் பெயர் அச்சிடப்பட்டிருந்தும், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், ஸ்ரீராமுலு, பூர்ணிமா, கூலிஹட்டி சேகர், திப்பா ரெட்டி ஆகியோர் வரவில்லை. மற்ற கட்சியினர் பங்கேற்றனர்.இம்மாவட்டத்தில் திப்பு ஜெயந்தியை கண்டித்து, நாயக் சமுதாயத்தினர் உட்பட மற்ற ஹிந்து அமைப்பினர், போராட்டம் நடத்தினர்.
தட்சிண கன்னட மாவட்டத்தில், பா.ஜ., ஹிந்து அமைப்பினர் தர்ணா நடத்தியதால், தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஹிந்து அமைப்பின் தொண்டர்கள், போலீஸ் பாதுகாப்பை மீறி, மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நுழைய முயற்சித்தனர். கறுப்பு கொடியுடன் போராட்டம் நடத்த முயற்சித்த பலரை, போலீசார் கைது செய்தனர்.இம்மாவட்டத்தில் நடந்த திப்பு ஜெயந்தியில், அமைச்சர் காதர் பங்கேற்கவில்லை.
சில இடங்களில் முக்கிய தலைவர்கள் இல்லாமல் கொண்டாடப்பட்டது.குடகில் திப்பு ஜெயந்திக்கு கடும் எதிர்ப்பு காணப்பட்டது. இந்து அமைப்பினர் கறுப்பு கொடி ஏந்தி, போராட்டம் நடத்தினர். கடைகள், வர்த்தக மையங்களை மூடி, 'பந்த்' அனுஷ்டித்தனர். போராட்டம் நடத்திய, பா.ஜ., பிரமுகர்களை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X