மருத்துவமனையில் சுகாதாரம் கேள்விக்குறி நோயாளிகளுக்கு 'டெங்கு' பரவும் அபாயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனையில் சுகாதாரம் கேள்விக்குறி நோயாளிகளுக்கு 'டெங்கு' பரவும் அபாயம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 மருத்துவமனையில் சுகாதாரம் கேள்விக்குறி நோயாளிகளுக்கு 'டெங்கு' பரவும் அபாயம்

நோயாளிகளுக்கு 'டெங்கு' பரவும் அபாயம்

வால்பாறை:வால்பாறை அரசு மருத்துவமனையில், 'செப்டிக் டேங்க்' கசிவு ஏற்படுவதால், சுகாதாரம் கேள்விக்குறியாகிறது.வால்பாறை அரசு மருத்துவமனையில், உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற ஆண், பெண் இருபாலருக்கும் சேர்ந்து, 40 படுக்கை வசதி கொண்ட தனித்தனி அறை உள்ளது. இது தவிர, தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் மருத்துவமனைக்கு வருகின்றனர்.தற்போது, டெங்கு, வைரஸ், பன்றிக்காய்ச்சல் போன்ற நோய் தாக்குதலால் மக்கள் அவதிப்படுகின்றனர். வால்பாறை தாலுகாவில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இந்நிலையில், அரசு மருத்துவமனையில் நோயாளிகள் பயன்படுத்தும் கழிப்பறையின், 'செப்டிக் டேங்க்' நிரம்பி கழிவுநீர், கால்வாயில் செல்வதால் சிகிச்சை பெரும் நோயாளிகள், சுகாதார சீர்கேட்டால் அவதிப்படுகின்றனர்.மேலும், அரசு மருத்துவமனை வளாகத்தில், தேங்கி நிற்கும் தண்ணீரில் டெங்கு கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், சாதாரண நோயாளிகளுக்கு டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதை தடுக்க, அரசு மருத்துவமனை நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், நோயாளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறிவருகிறது.வால்பாறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் (பொ) விேனாத் கூறுகையில், ''மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறையால், இந்த பிரச்னை ஏற்படுகிறது.'செப்டிக் டேங்க்' கழிவுநீர் வெளியேறுவதை தடுக்கவும், கொசு உற்பத்திக்கான காரணிகளை உடனடியாக சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X