சபரிமலை வரும் வாகனங்களுக்கு கேரள போலீஸ், 'ஸ்பெஷல் பாஸ்'| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சபரிமலை வரும் வாகனங்களுக்கு கேரள போலீஸ், 'ஸ்பெஷல் பாஸ்'

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சபரிமலை:சபரிமலை வரும் வாகனங்கள் கேரள போலீஸ் ஸ்டேஷனில், 'ஸ்பெஷல் பாஸ்' எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மண்டல, மகரவிளக்கு கால சீசனில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சபரிமலை வரும். இந்த ஆண்டு முதல் சபரிமலை வரும் வாகனங்கள், நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப் படும். பின், கேரள அரசு பஸ்சில் செல்ல வேண்டும்.அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவால் சபரிமலையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருதி, மண்டல காலத்தில், போலீஸ் தன் கெடுபிடியை அதிகரித்து உள்ளது.
இதன்படி சபரிமலை வரும் வாகனங்கள் அந்தந்த பகுதி போலீஸ் ஸ்டேஷனில் விபரங்களை பதிவு செய்து, 'பாஸ்' பெற்று அதை வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டியிருக்க வேண்டும். இந்த வாகனங்கள் மட்டுமே நிலக்கல் பார்க்கிங்கில் அனுமதிக்கப்படும்.'வெளி மாநில வாகனங்கள் நிலக்கல் எல்லையில் இந்த பாஸ் வாங்க வேண்டும். இதற்கு தனியாக வசதி செய்யப்படும்' என, கேரள போலீஸ் அறிவித்துள்ளது.
இது குறித்து பா.ஜ., மாநில பொது செயலர் ரமேஷ் கூறியதாவது:ஜனநாயகத்துக்கு எதிரான உத்தரவுகளை கடைப்பிடிக்க முடியாது. ஆயிரக்கணக்கான வாகனங்கள், 'பாஸ்' எடுக்காமல் சபரிமலை வரும். முடிந்தால் பினராயி அரசு தடுத்து பார்க்கட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


'காணிக்கை வேண்டாம்'



அய்யப்பா தர்மசேனா தலைவரும், தந்திரி குடும்ப மகள் வழி பேரனுமான ராகுல் ஈஸ்வர் கூறியதாவது:சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற நிலைப்பாட்டை தேவசம் போர்டு எடுத்தால், 'கோவில்களில் காணிக்கை இடவேண்டாம், தட்சணை மட்டும் கொடுத்தால் போதும்' என்ற பிரசாரம் தீவிரப்படுத்தப்படும். அய்யப்பனுக்கு காணிக்கையாக கிடைக்கும் பணத்தை கொண்டு அய்யப்பனுக்கு எதிராக வாதிடுவது தேவசம்போர்டு நிர்வாகிகள் தங்கள் சத்திய பிரமாணத்தை மீறும் செயல்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X