பழமையான கோவில்: துவக்கவில்லை பணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழமையான கோவில்: துவக்கவில்லை பணி

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பக்தர்கள் கடும் அதிருப்தி

உடுமலை:தொல்லியல்துறையினர், தொழில்நுட்ப கருத்துரு, சமர்ப்பித்து, ஓராண்டுக்கு மேலாகியும், கோவில், திருப்பணியை அறநிலையத்துறையினர் துவக்காததால், அதிருப்தி நிலவுகிறது.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதியில், பழமை வாய்ந்த கோவில்கள் அதிகமுள்ளன. மானியமாக அளிக்கப்பட்ட நிலங்கள் ஆக்கிரமிப்பால், வருவாய் குறைந்து, குறித்த காலத்தில், கும்பாபிேஷகம் உட்பட புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல், கோவில்கள் பொலிவிழக்கத்துவங்கின.முற்காலத்தில், கற்களை மட்டுமே கொண்டு, கட்டப்பட்ட கற்றளி அமைப்பிலான கோவில்களும், மழை நீர் உட்புகுதல் போன்ற காரணங்களால், மேற்புறத்தில் விரிசல் ஏற்பட்டன.கோபுரங்களில், வளர்ந்த மரங்களால், அதிலுள்ள சிற்பங்கள் பாதிக்கப்பட்டன. பழங்கால கோவில்களின் தொன்மை மாறாமல், அவற்றை புதுப்பிக்க, தொல்லியல் துறையினர், ஆய்வு நடத்தி, தொழில்நுட்ப கருத்துருவை, இந்து அறநிலையத்துறையிடம் சமர்ப்பிக்கின்றனர்.அதன்படி, புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்வதால், கல்வெட்டு மற்றும் சிற்பங்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. அவற்றின் பழமையும் பாதுகாக்கப்படும்.இத்திட்டத்தில், சோமவாரப்பட்டி மூவர் கண்டியம்மன், கொழுமம் வரதராஜ பெருமாள் கோவில்களில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி, ஓராண்டுக்கு, முன் கருத்துரு சமர்ப்பித்தனர். கோட்டமங்கலம் வல்லக்கொண்டம்மன் கோவிலில் முதற்கட்ட ஆய்வு முடிந்துள்ளது.திருப்பணிகள், ஆணைய நிதி ஒதுக்கீட்டில், மேற்கொள்ளப்படும் என, இந்து அறநிலையத்துறையினர் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, பழமையான கோவில்கள் பராமரிப்பில், இந்து அறநிலையத்துறை தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக, கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X