ரத்த பரிசோதனை மையத்திற்கு அபராதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரத்த பரிசோதனை மையத்திற்கு அபராதம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உடுமலை:மருத்துவக்கழிவுகளை பொது இடத்தில் வீசிய, உடுமலை ரத்த பரிசோதனை மையத்திற்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.மருத்துமனைகள், ஆய்வகங்களில் உருவாகும் மருத்துவ கழிவுகளை, உரிய முறைப்படி, அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலமே அழிக்க வேண்டும். ஒரு சில மருத்துவமனைகள், நகராட்சி திடக்கழிவுகளோடு அப்புறப்படுத்துவது கண்டறியப்பட்டு, 75 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது.இந்நிலையில், தாலுகா அலுவலக ரோட்டில், ரத்தம் எடுக்க உபயோகப்படுத்தப்பட்ட ஊசிகள், பஞ்சு உள்ளிட்ட மருத்துவக்கழிவுகள் வீசப்படுவதாக புகார் வந்தது. நகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து, அபாயகரமான மருத்துவக்கழிவுகளை, பொது இடங்களில் வீசிய ஆய்வகத்திற்கு, மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதிகளின்படி, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.நகரிலுள்ள மருத்துவமனைகள், ஆய்வகங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்; மருத்துவக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாதது கண்டறியப்பட்டால், மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதிகளின்படி, கடுமையான அபராதமும், நீதிமன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X