பி.ஏ.பி., 2ம் மண்டல பாசனம் 4வது சுற்றுக்கு, 12ல் நீர் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பி.ஏ.பி., 2ம் மண்டல பாசனம் 4வது சுற்றுக்கு, 12ல் நீர் திறப்பு

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பொள்ளாச்சி:'பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில், நான்காவது சுற்று தண்ணீர் வரும், 12ம் தேதி திறக்கப்படும்,' என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.திருமூர்த்தி அணையில் இருந்து, திறக்கப்படும் பாசன நீர், நான்கு மண்டலத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது.இந்தாண்டு கோடை மழை, பருவமழை கை கொடுத்ததால், பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகள் நிரம்பின. இதனால், பாசன காலத்தில் திருப்தியாக பாசன நீர் கிடைக்கும் என, விவசாயிகளிடம் எதிர்பார்ப்பு நிலவியது.கடந்த, ஜூலை மாதம் காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, திருமூர்த்தி அணையில் தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டது.முதல் மண்டலத்தில் நிலுவையில் இருந்த, ஒரு சுற்றுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. இரண்டாம் மண்டல பாசனத்துக்கு, மொத்தம், 135 நாட்களுக்கு உரிய இடைவெளி விட்டு, ஒரு சுற்றுக்கு, 1,900 மில்லியன் கன அடி வீதம், ஐந்து சுற்றுக்கு, 9,500 மில்லியன் கனஅடி தண்ணீர் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது.இதனையடுத்து, திருமூர்த்தி அணையில் இருந்து கடந்த செப்., மாதம், 20ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாயிகள், நிலத்தை உழவு செய்து மக்காச்சோளம் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டினர். தொடர்ந்து, மூன்று சுற்று தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.அக்., மாதம், 15ம் தேதி திறக்கப்பட்ட மூன்றாவது சுற்று தண்ணீர், கடந்த, 6ம் தேதி நிறுத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில், நான்காவது சுற்று தண்ணீர் எப்போது திறக்கப்படும் என விவசாயிகளிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'திருமூர்த்தி அணையில் இருந்து, நான்காவது சுற்று தண்ணீர் திறப்புக்காக, நீர் இருப்பு செய்யப்படுகிறது. வரும், 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X