விவசாயிகள் கடன் ரத்து ம.பி.,யில் காங்., வாக்குறுதி| Dinamalar

விவசாயிகள் கடன் ரத்து ம.பி.,யில் காங்., வாக்குறுதி

Added : நவ 11, 2018 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 விவசாயிகள் கடன் ரத்து  ம.பி.,யில் காங்., வாக்குறுதி

போபால்,:'மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் கடனை ரத்து செய்வோம்' என, காங்கிரஸ் வாக்குறுதி அளித்துஉள்ளது.மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், சட்டசபை தேர்தல், ௨௮ல் நடக்கிறது. இதையொட்டி, அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.இந்நிலையில், காங்., சார்பில், தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. போபாலில், ம.பி., மாநில, காங்., தலைவர் கமல்நாத் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், கூறியிருப்பதாவது:ம.பி.,யில், ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் கடன்கள் உடனடியாக ரத்து செய்யப்படும். பசுக்களை பாதுகாக்க, கோசாலைகள் அமைக்கப் படும். விவசாயிகளின் மின் கட்டணம், ௫௦ சதவீதம் குறைக்கப்படும்.ஒவ்வொரு குடும்பத்திலும், வேலையில்லாத இளைஞருக்கு, ௧௦ ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஏழை பெண்களின் திருமணத்துக்கு, ௫௧ ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். பெட்ரோல், டீசல் மீதான வரிகள் குறைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajavel - Ariyalur,இந்தியா
11-நவ-201810:03:22 IST Report Abuse
Rajavel விவசாயிகளை அடித்து நொறுக்கிய, அம்மணமாக தெருவில் ஓடவிட்டு விரட்டிய மத்திய மாநில பிஜேபி அரசுகள் அதற்கான தண்டனையை பெறவேண்டிய நேரமிது.
Rate this:
Share this comment
Cancel
Rajavel - Ariyalur,இந்தியா
11-நவ-201809:51:41 IST Report Abuse
Rajavel ஊதாரித்தனமாக செலவு செய்யும், பொய்கணக்கு காட்டும் கார்பரேட்களுக்கு பல லட்சம் கோடி தள்ளுபடி செய்ய பணம் இருக்கும் மோடி அரசுக்கு விவசாயிகளுக்கு சில ஆயிரம் கோடிகள் கூட தள்ளுபடி செய்ய மனமில்லை.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
11-நவ-201808:44:59 IST Report Abuse
ஆரூர் ரங் விவசாயிகள் எப்போது எவ்வளவு கடன் வாங்கினாலும் விளைச்சல் நன்கு இருந்தாலும் அவை தள்ளுபடி செய்யப்படும் .அதாவது கடன்வாங்கிய யாரும் எப்போதுமே திரும்பகட்டவேண்டாம் என நிரந்தரமாக அறிவித்து விடலாமே . ஒட்டுக்குப் பணம் கொடுப்பதற்குப்பதில் இதுபோல கடன் தள்ளுபடி அறிவித்தால் இன்னும்பலர் ஏமாறுவார்கள் .வங்கியில் டெபாசிட் போடுபவன் எக்கேடு கெட்டுப் போகட்டுமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X