சிவகங்கையில் ஊரணி மீட்பு: | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிவகங்கையில் ஊரணி மீட்பு:

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 சிவகங்கையில் ஊரணி மீட்பு:

சிவகங்கை:சிவகங்கையில், குப்பையால் மூடிய குண்டூரணியை, 40 ஆண்டுகள் கழித்து நகராட்சி அதிகாரிகள் மீட்டனர். அதிலிருந்து, 100 டன் குப்பை அகற்றப்பட்டது.
நேரு பஜார், பழைய மருத்துவமனை அருகே, 100 ஆண்டுகளுக்கு முன், ஊரணி தோண்ட, 2.3 ஏக்கரை தனியார் ஒருவர் அரசுக்கு தானமாக வழங்கினார். 15 அடி ஆழத்தில் ஊரணியும், குளிக்க படித்துறையும் கட்டப்பட்டன.நகரின் முக்கிய நீராதாரமாக இருந்தது. நகராட்சி கட்டுப்பாட்டில் இருந்த ஊரணியை குப்பை, கட்டட இடிபாடுகளை கொட்டி மூடினர். வரத்துக்கால்வாயையும் ஆக்கிரமித்தனர். இதனால் ஊரணி இருந்த சுவடு தெரியாமல் மறைந்தது.
அதை மீட்க பல கட்டமாக போராட்டம் நடத்தியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. குப்பையால் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியினர் சமீபத்தில், கலெக்டர் ஜெயகாந்தனிடம் புகார் கொடுத்தனர். ஆய்வு செய்த அவர், குப்பையை அகற்றி ஊரணியை மீட்க நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
40 ஆண்டுகள் கழித்து ஊரணியை மீட்கும் பணி நடக்கிறது. இதுவரை, 100 டன் குப்பை அகற்றப் பட்டு உள்ளது. நகராட்சி ஆணையர் கூறுகையில், 'குப்பை முழுவதும் அகற்றப்பட்டு, 15 அடி ஆழத்திற்கு தோண்டப்படும். வரத்துக் கால்வாய்களையும் மீட்டு, ஊரணி நிரப்படும். மக்கள் குளிக்க வசதி செய்து தரப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X