எலிசபெத் மகாராணி பயணம் செய்த நீராவி இன்ஜின் சோதனை ஓட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எலிசபெத் மகாராணி பயணம் செய்த நீராவி இன்ஜின் சோதனை ஓட்டம்

Added : நவ 11, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 எலிசபெத் மகாராணி பயணம் செய்த  நீராவி இன்ஜின் சோதனை ஓட்டம்

துாத்துக்குடி:இந்தியாவில், எலிசபெத் மகாராணி பயணம் செய்த நீராவி ரயில் இன்ஜின், திருச்செந்துார் - ஸ்ரீவைகுண்டம் இடையே, சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டது.
ஆங்கிலேயர் காலத்தில் இருந்த, 'ஈஸ்ட் இண்டியன் ரயில்வே கம்பெனி'யின் தயாரிப்பான, ஈ.ஐ.ஆர்., 21 எனும் நீராவி இன்ஜின், இங்கிலாந்தில், 1855-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. ஈ.ஐ.ஆர்., 21 மற்றும், 22 ஆகிய இரண்டு இன்ஜின்களும், விக்டோரியா மகாராணி, பயணம் செய்வதற்காக, இங்கிலாந்தில் இருந்து, இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன.
உலகிலேயே பழமையான இந்த இரண்டு இன்ஜின்களும், இந்தியாவில், 163 ஆண்டுகளாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை, கடைசியாக, மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டா - கான்பூர் வழித்தடத்தில் இயக்கப்பட்டன.கடந்த, 1964-ம் ஆண்டுக்குப் பின், எந்த வழித்தடத்திலும் இயக்கப்படவில்லை. இந்தியன் ரயில்வே, இந்த இன்ஜின்களை, 2014-ம் ஆண்டில், குடியரசுதினம், சுதந்திர தினங்களில் பயணியரை கவரும் வகையிலும், பாரம்பரியத்தைப் பேணும் வகையிலும், குறிப்பிட்ட துாரம் மட்டும் இயக்கியது.
இந்த இரண்டு இன்ஜின்களில், ஈ.ஐ.ஆர்.,- 21, ஜூன் மாதம், சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. சென்னை எழும்பூர் -- கோடம்பாக்கம் இடையே, 6 கி.மீ.,க்கு ஒரு பெட்டியுடன், 45 பயணியருடன் இயக்கப்பட்டது.பழமையான இந்த இன்ஜினை பயன்படுத்தி, 'இந்திய பாரம்பரிய ரயில் பயணம்' எனும் திட்டத்தை நெல்லையில் அறிமுகப்படுத்த, தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்காக பழமையான ஒரு இன்ஜின், நெல்லை வழியாக, திருச்செந்துாருக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த இன்ஜினுடன், ஒரு பெட்டி இணைக்கப்பட்டு, அதில் ஜெனரேட்டருடன், 'ஏசி' அமைக்கும் பணி நடந்தது. இந்த ரயில் இன்ஜினின் சோதனை ஓட்டம், நேற்று முன்தினம், திருச்செந்துாரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வரை நடந்தது.எந்தெந்த நாட்களில், எந்தெந்த நேரங்களில் இயக்கப்படும் என்பதை, தெற்கு ரயில்வே நிர்வாகம் விரைவில் அறிவிக்கும்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
11-நவ-201809:44:53 IST Report Abuse
g.s,rajan Old is always Gold. g.s.rajan, Chennai
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-நவ-201808:37:45 IST Report Abuse
Srinivasan Kannaiya பழசு எப்புவுமே புனிதம்தான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X