'தட்டாஞ்சாவடியில் தி.மு.க., போட்டியிடும்'| Dinamalar

'தட்டாஞ்சாவடியில் தி.மு.க., போட்டியிடும்'

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுச்சேரி:''புதுச்சேரியில், காலியாக உள்ள தட்டாஞ்சாவடி தொகுதியில், தி.மு.க., போட்டியிடும்,'' என, முதல்வர் நாராயணசாமி கூறினார். அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
மருத்துவ படிப்பை, 10 ஆண்டுகளில் எழுதி முடிக்க வேண்டும். புதுச்சேரி பல்கலைக்கழகம் இந்த விதிமுறையை, எட்டு ஆண்டாக குறைத்தது.எட்டு ஆண்டுகள் கடந்தும், புதுச்சேரியில், 50க்கும் மேற்பட்டோர் மருத்துவ படிப்பை முடிக்கவில்லை. இதனால், அந்த மருத்துவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது.பாதிக்கப்பட்டோர் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்திடம் வலியுறுத்தப்பட்டது.பல்கலைக்கழகமும், ஒன்பது ஆண்டாக நீட்டிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், 50 பேர் தேர்வு எழுத வாய்ப்பு கிடைத்துள்ளது. தட்டாஞ்சாவடி தொகுதி முன்னாள், எம்.எல்.ஏ., அசோக் ஆனந்த், புதுச்சேரி நீதிமன்ற தீர்ப்பு காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டு, அத்தொகுதி காலியாக உள்ளதாக சபாநாயகர் அறிவித்துஉள்ளார்.இத்தகவல் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
கடந்த, 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில்,அத்தொகுதியில், கூட்டணி யில், தி.மு.க., போட்டி யிட்டது. எனவே, அத்தொகுதியில் தற்போது போட்டியிட, தி.மு.க., கோரியுள்ளது. அதற்கான உரிமையும் அக்கட்சிக்கு உள்ளது. தட்டாஞ்சாவடி தொகுதி யில் தி.மு.க., வெற்றி பெற காங்., தொண்டர்களும், தலைவர்களும் நடவடிக்கை எடுப்போம்.இவ்வாறு முதல்வர் நாராயணசாமி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X