போலீஸ் செய்திகள்...| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்...

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

விமான நிலையத்திற்குமிரட்டல்: சிறுவனிடம் விசாரணை மதுரை: விமான நிலையத்திற்கு குண்டு வைத்திருப்பதாக நேற்றுமுன்தினம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் பொய்யான தகவல் எனத்தெரிந்தது. இதுதொடர்பாக மேலஅனுப்பானடியைச் சேர்ந்த 14 வயது சிறுவனிடம் விசாரித்தபோது, 'விமானங்களுக்கு குண்டு வைத்திருப்பதாக இருவர் பேசிக்கொண்டனர். அதனால்தான் போலீசாருக்கு தகவலாக தெரிவித்தேன்' என்றார். இதன்காரணமாக சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.கந்துவட்டி: மூவர் கைதுமதுரை: சதாசிவ நகர் அருண்,27. மருத்துவ உபகரணங்கள் விற்பனை தொழில் செய்கிறார். கடந்த 2014ல் வில்லாபுரம் ஹவுசிங்போர்டு காலனி முகமது நவாஸ்,28, தெற்குமாசிவீதி ேஷக்மைதீன்,31, தெற்குவாசல் முகமது யூனிஸ்,30, ஆகியோரிடம் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். இதற்கு 3 லட்சம் ரூபாய் வட்டி செலுத்திய நிலையில், தெப்பக்குளம் பகுதியில் அருணை கடத்திச்சென்று 1.68 லட்சம் ரூபாய் மற்றும் அலைபேசி, இ.எம்.ஐ., கார்டு பறித்துக்கொண்டனர். இ.எம்.ஐ., கார்டு மூலம் வீட்டு உபயோக பொருட்களை வாங்கியதோடு, கூடுதலாக ஒரு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக மூவர் கைது செய்யப்பட்டனர். தாஜூதீன், கபாப் ஆகியோரை தெப்பக்குளம் போலீசார் தேடி வருகின்றனர்.அதிகாரிகளுடன் வாக்குவாதம்மதுரை: உயர்நீதிமன்ற கிளை உத்தரவுபடி வைகை கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. ஏ.வி. பாலம் பகுதியில் உள்ள பள்ளிவாசலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் மாநகராட்சி, பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் குவிக்கப்பட்டனர். நாளை(நவ.,12) வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் ஒருவர் பலிபேரையூர்: நேற்று முன்தினம் பரவை மார்க்கெட்டிலிருந்து பேரையூருக்கு காய்கறி ஏற்றிக் கொண்டு வந்த சரக்கு வேன் சேடபட்டி அருகில் நின்றிருந்த போது லாரி மோதியது. இதில் சாப்டூர் லோடுமேன் ஆனந்தன்,46, இறந்தார். சிகிச்சையில் இருந்த காய்கறி கடைக்காரர் ராதாகிருஷ்ணன்,45, நேற்று இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X