ஆட்டோக்களில் மது பாட்டில்கள் கடத்தல் : போலீசாரை மிரள வைக்கும் டிரைவர்கள் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆட்டோக்களில் மது பாட்டில்கள் கடத்தல் : போலீசாரை மிரள வைக்கும் டிரைவர்கள்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 ஆட்டோக்களில் மது பாட்டில்கள் கடத்தல் : போலீசாரை மிரள வைக்கும் டிரைவர்கள்

புதுச்சேரியில் இருந்து, சிலர் ஆட்டோக்கள் மூலமாக கடலுாருக்கு மதுபாட்டில்கள் கடத்தி வருகின்றனர். அவர்களை பிடிக்கும் போலீசாருக்கு, ஜாதி ரீதியான மிரட்டல்கள் வருவதாக போலீசார் புலம்புகின்றனர்.
புதுச்சேரி எல்லையில் உள்ள ஆராய்ச்சிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சாராய வியாபாரிகள், கடலுார் பகுதி 'குடி'மகன்களின் வசதிக்காக, தென் பெண்ணையாற்றின் குறுக்கே மரப்பாலம் அமைத்து கொடுத்தனர். இதன் மூலம் ஏராளமான, 'குடி'மகன்கள், ஆற்றை கடந்து சென்று, மது குடித்து வந்தனர். இந்நிலையில், 'குடி'மகன்கள் சிலர் ஆற்றில் தவறி விழுந்து இறந்தது, போலீசார் மற்றும் அதிகாரிகள் பாலத்தை அகற்றினர்.


இலவச சர்வீஸ்




இதையடுத்து, கடலுார் பகுதி, 'குடி'மகன்களை கவரும் வகையில், அவர்களை இலவசமாக அழைத்துச் செல்ல, ஷேர் ஆட்டோக்களை, சாராய வியாபாரிகள் வாங்கி, இலவச சர்வீஸ் செய்து வருகின்றனர்.இது போன்று, கடலுார் - புதுச்சேரிக்கு தினந்தோறும், 100க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக அம்மாநிலத்தைச் சேர்ந்த டிரைவர்களின் பெயரில், கடலுாரில் போலி முகவரியுடன் ஆட்டோக் களுக்கு உரிமம் பெற்று, இயக்கி வருகின்றனர்.இதை சாதகமாக பயன்படுத்தி, ஆட்டோ டிரைவர்கள் சிலர், சட்ட விரோதமாக சரக்குகளை கடத்தி வருகின்றனர். இதற்கு சில அதிகாரிகளும் உடந்தை யாக உள்ளனர்.
இது குறித்து, போலீஸ்காரர் ஒருவர் கூறியதாவது:'குடி' மகன்களின் வசதிக்காக கடலுார் - புதுச்சேரிக்கு, 100க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் புதுச்சேரியில் இருந்து வரும் ஆட்டோக்களை டிரைவர்கள், போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி, 'குடி'மகன்களை ஏற்றிச் செல்கின்றனர். இதனால், போக்குவரத்து பாதிப்பதுடன், மாணவ - மாணவியரும் அவதியடைகின்றனர்.
அவர்களை பிடித்து வழக்குப் போட்டாலும், ஜாதி ரீதியாக மிரட்டல் விடுப்பதுடன், சட்ட ஆலோசகர் ஒருவர் உதவியுடன் வழக்கில் இருந்து வெளியே வந்து, பழையபடி அதே தொழிலில் ஈடுபடுகின்றனர்.சட்டம் - ஒழுங்குஅவர்கள், மது பாட்டில்களை மட்டும் கடத்துவதில்லை. சட்ட விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். வெளி நபர்களும் கடலுார் நகருக்குள் வருகின்றனர். இதனால், சட்டம் - ஒழுங்கு பாதிக்கும் அபாயமும் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X