மத்தியில் நடப்பது குற்றம், குறையில்லா ஆன்மிக ஆட்சி: ராஜேந்திரபாலாஜி பாராட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மத்தியில் நடப்பது குற்றம், குறையில்லா ஆன்மிக ஆட்சி: ராஜேந்திரபாலாஜி பாராட்டு

Added : நவ 11, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார்:''மத்தியில் ஆளும் பா.ஜ.,வால் குற்றம் குறையில்லாத ஆன்மிக ஆட்சி நடப்பதாக ,'' பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்துாரில் அவர் கூறியதாவது: தேர்தல் நெருங்கும் போது எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் கூட்டணி முயற்சி செய்வர். அதுபோல் தான் சந்திரபாபு, ஸ்டாலின் சந்திப்பு .இதில் அதிசயம் எதுவும் கிடையாது. அ.தி.மு.க.,விலும் பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமாக முதல்வர் வியூகங்கள் வகுத்து வருகிறார். விரைவில் பலமான கூட்டணி அமைத்து வெற்றி பெற நடவடிக்கை எடுப்பார்.
மோடியை பிரதமராக்க சந்திரபாபு நாயுடு தான் விடிய விடிய ஓட்டு கேட்டார். அவர் கோரிக்கை நிறைவேறாததால் வெளியேறி உள்ளார். மத்திய பா.ஜ., ஆட்சியில் பெரிய அளவில் குற்றம், குறைகள் ஏதுவும் இல்லை. மக்கள் பணிகளை அக்கறையுடன் செய்து வருகிறார்கள். ஆன்மிக ரீதியான ஆட்சியை நடத்துகிறார்கள்.
தமிழகத்தில் இன்னும் 2 அல்ல, 2 ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க .,ஆட்சி தொடரும். பிக்பாஸ் நிகழ்ச்சிபோல் கமல் அரசியல் செய்வது எடுபடாது. தமிழகத்தில் மது விற்பனையை நிறுத்தினால் அவர்கள் எங்காவது போய் எதையாவது குடிப்பார்கள். புதுச்சேரிக்கோ, கர்நாடகாவிற்கோ போய் குடித்து உடலை கெடுத்து உயிரிழப்பார்கள். மதுவிற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கவில்லை, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
11-நவ-201804:33:22 IST Report Abuse
Bhaskaran என்ன ஒரு நல்லெண்ணம் இவருக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X