சந்தேகத்தில் மனைவி கொலை உடல் செப்டிக் டேங்கில் வீச்சு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சந்தேகத்தில் மனைவி கொலை உடல் செப்டிக் டேங்கில் வீச்சு

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருநெல்வேலி:நெல்லை அருகே சந்தேகத்தில் மனைவியை வெட்டிக்கொலை செய்து செப்டிக் டேங்கில் போட்டவரை போலீசார் தேடிவருகின்றனர்.
திருநெல்வேலி, ஊத்துமலையை அருகே கே.நவநீதகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் 39. இவரது மனைவி பாலசுந்தரி 34. நெல்லை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக உள்ளார். மனைவியின் நடத்தையில் ஆறுமுகத்திற்கு சந்தேகம் இருந்தது. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமுற்ற ஆறுமுகம், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். உடலை வீட்டில் செப்டிக் டேங்கில் போட்டுவிட்டு, 4 வயது மகனுடன் தலைமறைவானார். மனைவியின் தம்பிக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். ஊத்துமலை போலீசார், செப்டிக் டேங்கில் இருந்த உடலை மீட்டு பரிசோதனைக்கு நெல்லை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆறுமுகத்தை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X