சபரிமலையில் பாதுகாப்பு அமைச்சர் உறுதி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சபரிமலையில் பாதுகாப்பு அமைச்சர் உறுதி

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:''சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு, பாதுகாப்பு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,'' என, சுற்றுலாத் துறை அமைச்சர், நடராஜன் கூறினார்.சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:
சபரிமலை செல்லும், தமிழக பக்தர்களுக்கு, சுற்றுலாத் துறை மற்றும் அறநிலையத் துறை சார்பில், தகுந்த பாதுகாப்பு வழங்க, உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்து வருகிறது.கார்த்திகை மாதம், சபரி மலை செல்லும் பக்தர்களுக்கு, தகுந்த பாதுகாப்பு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.சுற்றுலா துறையின் சார்பில், திருப்பதிக்கு தினமும் பஸ்கள் வாயிலாக, ௧௫௦ பயணியர் அழைத்து செல்லப்படுகின்றனர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X