மின் வாரியத்தில், 'பயோமெட்ரிக்' பதிவு முதல்வர் மாவட்டத்தில் விரைவில் அமல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின் வாரியத்தில், 'பயோமெட்ரிக்' பதிவு முதல்வர் மாவட்டத்தில் விரைவில் அமல்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஊழியர்களின் வருகையை, 'பயோமெட்ரிக்' எனப்படும், கைரேகை வாயிலாக பதிவு செய்யும் முறையை, சேலம் மாவட்டம், மேட்டூரில் அமல்படுத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
மின் வாரியத்திற்கு, பிரிவு அலுவலகங்கள், துணை மின் நிலையங்கள், மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் பணிபுரியும் ஊழியர்கள், தங்களின் வருகை பதிவை, பதிவேடுகளில் பதிவு செய்கின்றனர். தாமதம்பலரும், குறித்த நேரத்தில், அலுவலகம் வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்களை சேர்ந்த சிலர், தாமதமாக வருகின்றனர்.
அலுவலகம் வந்ததும், சொந்த வேலையை பார்க்க கிளம்புகின்றனர். இதனால், குறிப்பாக, மழை காலங்களில், மின் வினியோக பணிகளை மேற்கொள்வதில், ஊழியர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதையடுத்து, வருகை பதிவிற்கு, பயோமெட்ரிக் முறையை அமல்படுத்துமாறு, நிர்வாகத்திற்கு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.அதை செயல்படுத்த, சிலர் முட்டுக்கட்டை போட்டு வந்த நிலையில், மின் வாரியம், முதல் கட்டமாக, தற்போது, சேலம் மாவட்டம், மேட்டூரில் அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மேட்டூரில்,மின் வாரிய தொழிற்சாலை உள்ளது. அங்கு, மின் வினியோகத்திற்கு தேவையான உபகரணங்கள் தயாரிக்கப்படுகின்றன. அதில், 300 பேர் பணிபுரிகின்றனர். டெண்டர்அவர்களின் வருகை பதிவு, பதிவேடு முறையில் பராமரிக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக, விரைவில், பயோமெட்ரிக் வருகை பதிவு செய்யப்பட உள்ளது.இதற்காக, அந்த கருவிகளை வாங்க, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகம் உட்பட, அனைத்து அலுவலகங் களிலும், பயோமெட்ரிக் வருகை பதிவு செயல்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.


வேலை நேரம்



சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்திற்கு, காலை, 10:30 மணி முதல் மாலை, 5:15 மணி வரை;பிரிவு அலுவலகங்களுக்கு,காலை,8:00 மணி முதல் மாலை,5:00 மணி வரை,வேலை நேரம். மின் நிலையம், துணை மின் நிலையங்களுக்கு, எட்டு மணி நேரம் என்ற, 'ஷிப்ட்' முறை பின்பற்றப்படுகிறது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X