விஜய் சேதுபதி பட தயாரிப்பாளருக்கு நடிகர் சங்கம், 'ரெட் கார்டு' தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விஜய் சேதுபதி பட தயாரிப்பாளருக்கு நடிகர் சங்கம், 'ரெட் கார்டு' தடை

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை:நடிகர்களுக்கு சம்பளம் வழங்காத, 'மெட்ராஸ் என்டர்பிரைசஸ்' எனும் படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு, தென்னிந்திய நடிகர் சங்கம், 'ரெட் கார்டு' தடை போட்டுள்ளது.
விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்து, பிரேம்குமார் இயக்கிய, 96 படத்தை, இந்நிறுவனம் சார்பில், நந்தகோபால் என்பவர் தயாரித்துள்ளார்.இப்படத்திலும், இதற்கு முன் இந்நிறுவனம் தயாரித்த படத்திலும், நடிகர்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து, நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மெட்ராஸ் என்டர்பிரைசஸ் தயாரிப்பான, துப்பறிவாளன் படத்தில் நடித்த விஷால், வீரசிவாஜி படத்தில் நடித்த விக்ரம்பிரபு, 96 படத்தில் நடித்த விஜய் சேதுபதி ஆகியோருக்கு, சம்பள பாக்கியை வழங்காமலே, படத்தை திரையிட்டு உள்ளனர்.இப்படங்கள் திரையிடும் கடைசி நேரத்தில், நடிகர்களின் சூழ்நிலையை, இப்படத் தயாரிப்பு நிறுவனம், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, தொடர்ந்து சம்பளம் வழங்காமல், படங்களை திரையிட்டுள்ளனர்.
நடிகர்கள், தங்கள் வருமானத்தை விட்டுக் கொடுத்து, தயாரிப்பாளர்களுக்கு உதவி வருகின்றனர். இதை, சில தயாரிப்பு நிறுவனங்கள், தங்களுக்கு சாதகமாக்கி, ஒப்புக் கொண்ட சம்பளத்தை வழங்காமல், தொடர்ந்து ஏமாற்றி வருகின்றன.இந்த மாதிரியான நடவடிக்கையை, முடிவுக்கு கொண்டு வர ஆலோசிக்கப்பட்டது.
அதனடிப்படையில், இனிமேல், இம்மாதிரி செயல்படும் தயாரிப்பு நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும், படங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க கூடாது என, முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.எனவே, மெட்ராஸ் என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு, நடிகர், நடிகையர் யாரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் நந்தகோபால் கூறியதாவது:என் மீதும், என் நிறுவனத்தின் மீதும், தவறான அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து, தயாரிப்பாளர்கள் அனைவரும் கூடி, தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X