'ப்ரீ பெய்டு மீட்டர்' பொருத்த மின் வாரியம் அலட்சியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ப்ரீ பெய்டு மீட்டர்' பொருத்த மின் வாரியம் அலட்சியம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மத்திய அரசு உத்தரவிட்டும், அரசு அலுவலகங்களில், குறித்த காலத்தில், மின் கட்டணத்தை வசூலிக்க, 'ப்ரீ பெய்டு மீட்டர்' பொருத்த, மின் வாரியம் அலட்சியம் காட்டுகிறது.
உள்ளாட்சி, கல்வி உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளுக்கும், 75 ஆயிரம் மின் இணைப்புகளில், மின் வாரியம், மின் வினியோகம் செய்கிறது. இவை, குறித்த காலத்தில், மின் கட்டணத்தை செலுத்துவதில்லை.இதே பிரச்னை, நாடு முழுவதும் உள்ளது. இதனால் ஏற்படும் நிதி நெருக்கடியை தவிர்க்க, அரசு அலுவலகங்களில், 'ப்ரீ பெய்டு மீட்டர்' பொருத்துமாறு, மாநில மின் வாரியங்களுக்கு, 2017ல், மத்திய அரசு உத்தரவிட்டது.
அந்த மீட்டரில், குறிப்பிட்ட அளவு மின்சாரம் மட்டும் பயன்படுத்தும் வகையில், மென்பொருள் பதிவுகள் செய்யப்படும். அந்த அளவை தாண்டியதும், மின் சப்ளை தானாகவே நிறுத்தப்படும். இதனால், கட்டணம் செலுத்தினால் மட்டுமே, மீண்டும் மின் சப்ளை கிடைக்கும். அந்த மீட்டரை பொருத்த, மற்ற மாநில மின் வாரியங்கள், ஆர்வம் காட்டும் நிலையில், தமிழகத்தில், மின் வாரியம் அலட்சியம் காட்டுகிறது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மின்சாரம் விற்பனைக்கு ஏற்ப, கட்டணம் வசூலிக்க, ஆளில்லாமல், மின் பயன்பாட்டை கணக்கு எடுக்கும், 'ஸ்மார்ட்' மீட்டர்; தேவையான அளவு மட்டும் மின்சாரம் வழங்கும், ப்ரீ பெய்டு மீட்டர் பொருத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதனால், தமிழகத்தில், அரசு அலுவலகங்களில், ப்ரீ பெய்டு மீட்டர் பொருத்தும் பணியை, ஜனவரி மாதம் துவக்க திட்டமிடப்பட்டது. நிதி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களை காட்டி, அதை செயல்படுத்த, சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர்.
மின் பயன்பாட்டை பொறுத்து, மின் நுகர்வோரிடம், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, கூடுதல் காப்பு வைப்பு தொகை வசூலிக்கப்படுகிறது. இதை, வீடுகள், தனியார் நிறுவனங்கள், முறையாக செலுத்துகின்றன. ஏற்கனவே, மின் கட்டணத்தை செலுத்தாத அரசு துறைகள், கூடுதல் வைப்பு தொகையையும் செலுத்துவதில்லை. ப்ரீ பெய்டு மீட்டர் பொருத்தினால், அவை, குறித்த காலத்தில், கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படும். அதை துரிதகதியில் செயல்படுத்த, உயர்அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தொழில்நுட்ப அறிவு!மின் வாரியத்தில், ஸ்மார்ட் மீட்டர், ப்ரீ பெய்டு மீட்டர் போன்ற, புதிய தொழில்நுட்ப விபரங்களை அறிந்து கொள்ள, பொறியாளர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் தான், அத்திட்டங்களை செயல்படுத்த அலட்சியம் காட்டுவதாக, ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X