ரேஷன் கடைகளில் விஜிலென்ஸ் குழு புதிதாக நியமிக்க வேண்டிய கட்டாயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் விஜிலென்ஸ் குழு புதிதாக நியமிக்க வேண்டிய கட்டாயம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ரேஷன் கடைகளில், விஜிலென்ஸ் குழுவின் கூட்டத்தை, முறையாக நடத்த, புதிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், 34 ஆயிரத்து, 773 ரேஷன் கடைகள் உள்ளன. தலா, ஒரு கடையில், 1,000 - 1,200 கார்டுதாரர்களுக்கு, மானிய விலை உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதில், 70 சதவீதம் பேர் மட்டும், அனைத்து பொருட்களையும் வாங்குகின்றனர். இதனால், கார்டு தாரர் வாங்காத பொருட்களை, ஊழியர்கள் முறைகேடாக விற்பனை செய்கின்றனர்.உணவு பாதுகாப்பு சட்டம், தமிழகத்தில், 2016 நவம்பர் மாதம் அமல்படுத்தப்பட்டது.


ஆய்வு



அதை தொடர்ந்து, அனைவருக்கும் உணவு பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய, 2017ல், ஒவ்வொரு ரேஷன் கடையிலும், ஐந்து - ஏழு பேர் அடங்கிய, விஜிலென்ஸ் குழு அமைக்கப் பட்டது. அதில், ஒருவர் தலைவர்; மற்ற நபர்கள், உறுப்பினர்கள்.விஜிலென்ஸ் குழு, ஒவ்வொரு மாதமும் கூடி, தங்கள் கடையில் உள்ள, அனைத்து கார்டுதாரர்களுக்கும், எல்லா பொருட்களும் வழங்கப்பட்டு உள்ளதா என்பதை, ஆய்வு செய்ய வேண்டும்.
ஆனால், சென்னை உட்பட, பல மாவட்டங்களில், விஜிலென்ஸ் குழு கூட்டம், முறையாக நடப்பதில்லை.இதேபோல், வட்ட அளவில் உள்ள, உணவு வழங்கல் உதவி ஆணையர், வட்ட வழங்கல் அலுவலர், மக்கள் பிரதிநிதிகள்; மாவட்ட அளவில், கலெக்டர், மாவட்ட வழங்கல் அதிகாரி, கூட்டுறவு இணை பதிவாளர் உள்ளிட்டோர் அடங்கிய, விஜிலென்ஸ் குழு கூட்டமும் ஒழுங்காக நடப்பதில்லை.இது குறித்து, ரேஷன் கார்டுதாரர்கள் கூறியதாவது:விஜிலென்ஸ் குழு தொடர்பான விபரத்தை, ரேஷன் ஊழியர்கள், அனைத்து கார்டுதாரர்களுக்கும் தெரிவிக்க வில்லை. தங்களுக்கு வேண்டிய நபர்களை, குழு தலைவர், உறுப்பினர்களாக நியமித்தனர்.


புதிய குழு



இதற்கு, அதிகாரிகளும் உடந்தை. இதனால், கூட்டத்தை நடத்தாமல், நடந்து விட்டதாக, ஊழியர்கள் பதிவேடுகளில் பதிவு செய்கின்றனர்.எனவே, தற்போதுள்ள குழுவை கலைத்து, புதிய உறுப்பினர்கள் அடங்கிய குழுவை நியமிப்பதுடன், கூட்டத்தை முறையாக நடத்தவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X