இலங்கை அரசியல் குழப்பம் தமிழக கட்சிகள் கோரிக்கை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இலங்கை அரசியல் குழப்பம் தமிழக கட்சிகள் கோரிக்கை

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை:இலங்கை அரசியல் விவகாரத்தில் தலையிட்டு, தமிழர்கள் பாதுகாப்பாக வாழ, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, தமிழக கட்சி தலைவர்கள், வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதன் விபரம்:தி.மு.க., தலைவர் ஸ்டாலின்:
விபரீத சூழல், இலங்கையில் உருவாகி, அரசியல் ஸ்திரத்தன்மைக்கு, ஆபத்துக்கு உள்ளாகி உள்ளது. இந்த நேரத்தில், அங்கு வாழும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய, மிகப்பெரிய பொறுப்பும், கடமையும், மத்திய அரசுக்கு உள்ளது.இதை, பிரதமர் நரேந்திர மோடி உணர வேண்டும். இலங்கை தமிழர்கள், அமைதியாக, பாதுகாப்பாக வாழத் தேவையான, அனைத்து நடவடிக்கைகளையும், மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
பா.ம.க., இளைஞர் அணித் தலைவர் அன்புமணி:
இலங்கையில் நடக்க உள்ள, பார்லிமென்ட் தேர்தல், நிச்சயம் நேர்மையாக நடக்காது. தமிழர்களையும், ராஜபக்சேவுக்கு எதிரானவர்களையும் மிரட்டி, முறைகேடு செய்து, தேர்தலில் வெற்றி பெற, சிறிசேன - ராஜபக்சே கூட்டணி முயலும்.அவ்வாறு நடந்தால், தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும், இந்தியாவுக்கு எதிரான செயல்களும் தீவிரமடையும்.இலங்கை பிரதமர் விக்கிரமசிங்கே நீக்கப்பட்டு, ராஜபக்சே நியமிக்கப்பட்டபோதே, இந்தியா தலையிட்டிருந்தால், இந்த அளவுக்கு நிலைமை மோசமடைந்து இருக்காது.


விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்:

ராஜபக்சேவோடு, இலங்கை அதிபர் கூட்டு சேர்ந்து, சட்ட விரோதமாக செயல்படுவது, தமிழர்களுக்கும், இலங்கையின் ஜனநாயகத்திற்கும், மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது.அ.ம.மு.க., துணை பொதுச்செயலர் தினகரன்: இலங்கையில் நடக்கும் நகர்வுகளை, மத்திய அரசு கவனித்து, தமிழர்களின் உயிருக்கும், உடமைக்கும், நலனுக்கும் தீங்கு ஏற்படாதவாறு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X