காலாவதியான உணவுப்பொருள் விற்பனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காலாவதியான உணவுப்பொருள் விற்பனை

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திருப்பூர்:காலாவதியான உணவுப் பொருள் விற்பனை கட்டுக்குள் இல்லை' என, பொதுமக்கள் புலம்புகின்றனர்.நாளுக்கு நாள் உணவு தயாரிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சில உணவு பொருட்களில், அவை நீண்ட நாட்கள் கெடாத வகையில், சில வகை ரசாயனம் சேர்க்கப்பட்டு, விற்கப்படுகிறது. அவற்றின் சுவையை கூட்ட தடை செய்யப்பட்ட நிறமி சேர்க்கப்படுகிறது.இத்தகைய உணவுகளை உட்கொள்ளும் போது, வயிற்று உபாதை உட்பட பல்வேறு பிரச்னை ஏற்படுகிறது. எனவே, உடல் நலனுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உணவு தயாரிக்க, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், சில விதிகளை உருவாக்கியுள்ளது. அதன்படி, தரமான, சுத்தமான, பாதுகாப்பான உணவுப்பொருட்களை பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்படாத ரசாயன பொடியை சேர்க்கக் கூடாது. அயோடின் கலந்த உப்பு உட்பட அனுமதிக்கப்பட்ட எண்ணெய் வகைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு விதிமுறைகள் உள்ளன. இருப்பினும், நகரில் உள்ள பெரும்பாலான பேக்கரி மற்றும் டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில், இத்தகைய விதிமுறை பின்பற்றப்படுவதில்லை. தின்பண்டம் அடைக்கப்பட்ட கவரில், தயாரிப்பு நிறுவனத்தின் பெயர், முழு முகவரி, நிகர எடை, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி உட்பட விபரங்கள் இடம் பெறாமல் உள்ளது. மேலும், உணவு பாதுகாப்பு துறையிடம் இருந்து பெறப்பட்ட உரிம எண், அதில் அச்சிடப்படுவதில்லை.காலாவதியான நுாடுல்ஸ் பாக்கெட், வடகம், கலப்பட டீத்துாள், மசாலா பொருட்கள், நொறுக்கு தீனி, ரெடிமேடு புரோட்டா, மசால் பொடி, மல்லிப்பொடி, மிட்டாய் பாக்கெட்டுகள் ஆகியவை விற்கப்படுகின்றன.அவ்வப்போது, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, காலாவதியான தின்பண்டங்களை பறிமுதல் செய்து, கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தாலும், விதிமீறல் கட்டுக்குள் வரவில்லை. தொடர்ந்து இதே தவறை செய்தால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும், என்ற எச்சரிக்கைக்கு கூட, கடைக்காரர்கள் அசரவில்லை.எனவே, இத்தகைய விதிமீறலில் ஈடுபடுவோர் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X