சிறுபான்மை கல்லுாரி சேர்க்கை விபரம் மாநில ஆணையத்துக்கு ஐகோர்ட் தடை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிறுபான்மை கல்லுாரி சேர்க்கை விபரம் மாநில ஆணையத்துக்கு ஐகோர்ட் தடை

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை:சிறுபான்மை கல்லுாரிகள், மாணவர் சேர்க்கை விபரங்களை அளிக்கும்படி, சிறுபான்மை நல ஆணையம் அனுப்பிய, நோட்டீசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னையை சேர்ந்த, லயோலா கல்லுாரியின் முதல்வர், ஆன்ட்ரூ பிரான்சிஸ் தாக்கல் செய்த மனு:சிறுபான்மை கல்வி நிறுவனமான, எங்கள் கல்லுாரியில், மதம் மற்றும் ஜாதி அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுவது இல்லை. மாநில சிறுபான்மை நல ஆணையம், எங்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. மூன்று ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட மாணவர் விபரங்களை அளிக்கவும், ஆஜராகவும், அதில் கூறப்பட்டுள்ளது.


சட்டவிரோதம்



மாணவர் சேர்க்கை விஷயத்தில், சிறுபான்மை கல்லுாரிகளுக்கு, எந்த நிபந்தனையையும் விதிக்க, சிறுபான்மை நல ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. சிறுபான்மை கல்லுாரிகளின் மாணவர்கள் சேர்க்கையில், சிறுபான்மை நல ஆணையம் தலையிடுவது, சட்டவிரோதமானது. சிறுபான்மை கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை விஷயத்தில், குறிப்பிட்ட சதவீதத்தை நிர்ணயிக்கும்படி உத்தரவிட, சிறுபான்மை நல ஆணையத்துக்கு, தனியார் கல்லுாரிகள் ஒழுங்குமுறை சட்டம், அதிகாரம் வழங்கவில்லை.
எனவே, ஆணையத்தின் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இதுபோன்று, சென்னை கிறிஸ்தவ கல்லுாரி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லுாரி உட்பட, பல சிறுபான்மை கல்லுாரிகள் சார்பிலும், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இம்மனுக்கள், நீதிபதி, எஸ்.எஸ்.சுந்தர் முன், விசாரணைக்கு வந்தது.


நோட்டீஸ்



மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர், ஐசக் மோகன்லால், காட்சன் சுவாமிநாத் ஆஜராகி, ''குறைந்தபட்சம், ௫௦ சதவீத சிறுபான்மை மாணவர்களை சேர்க்க வேண்டும் என்பது, நடை முறை சாத்தியமில்லை.''அதே நேரத்தில், தகுதியுள்ள சிறுபான்மை சமூக மாணவர்களுக்கு, இடம் மறுக்கப்படுவது இல்லை,'' என்றனர்.இதையடுத்து, மாநில சிறுபான்மை ஆணையத்தின் நடவடிக்கைக்கு, நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தடை விதித்தார். மனுவுக்கு, இரண்டு வாரங்களில் பதில் அளிக்கும்படி, உயர் கல்வி துறை செயலர், சிறுபான்மை நல ஆணையத்துக்கு, நோட்டீஸ் அனுப்பவும், நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X