சித்தரேவு - தாண்டிக்குடி இடையே ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சித்தரேவு - தாண்டிக்குடி இடையே ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தாண்டிக்குடி, சித்தரேவு-தாண்டிக்குடி ரோடு சேதமடைந்து போக்குவரத்திற்கு சிரமமாக உள்ளதால் அதனை உடனே சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தினர்.முப்பது கி..மீ., துாரமுள்ள இந்த ரோட்டில் ஆங்காங்கே மழைநீர் வடிந்தோட குழாய் பாலங்கள் சமீபத்தில் அமைத்த பகுதியில் ராட்சத பள்ளங்கள், மணலுார் ஊராட்சி கொங்கப்பட்டியில் ரோட்டில் செல்லும் கழிவு நீரால் ரோடு அரிப்பு ஏற்பட்டு பல்லாங்குழி பள்ளங்கள், மஞ்சள்பரப்பு, புல்லாவெளியில் தடுப்புச்சுவர் சேதமடைந்து விரிசல் ஏற்பட்ட நிலை என ரோட்டின் நிலை படுமோசமாக உள்ளது. இருபுறமும் வளர்ந்து செடிகளால் எதிரே வரும் வாகனம் தெரியாது அடிக்கடிவிபத்துக்கள் ஏற்படும் நிலைஉள்ளது. மழை நீர் வடிந்தோட வாய்க்கால் வசதியின்றி பக்கவாட்டு பகுதி அரிப்பு ஏற்பட்டு ஒருவழிப்பாதை ரோட்டில் இடம் கொடுப்பதில் நெருக்கடி நிலை உள்ளது.ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமப்பகுதியை இணைக்கும் முக்கிய வழித்தடமான இந்த ரோடு வத்தலக்குண்டு நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில்வளர்ச்சி பணிகள் மற்றும் பராமரிப்பு சிறப்பாக இருந்தது. ஆத்துார் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டிற்கு சென்ற பின் அதிகாரிகள் மலை ரோட்டிற்கு போதிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் சித்தரேவு-தாண்டிக்குடி மலை ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X