தீவிரம்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தீவிரம்!

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தீவிரம்!

தேர்தல் பணியாளர் விவரம் சேகரிப்பு... 'லோக்சபா' தேர்தல் ஆயத்த பணி 'ஜரூர்'-திருப்பூர்:‛லோக்சபா' தேர்தல் நெருங்கிக்கொண்டிருப்பதால், தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர் விவரங்களை சேகரித்து, 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. லோக்சபா தேர்தல் பணியை துவங்குவதற்காக, இந்திய தேர்தல் கமிஷன், தேவையான ஆயத்த பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ஓட்டுச்சாவடி பிரித்தல்; புதிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தருவிப்பு, வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் பட்டியல் தயாரிப்பு, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட வாக்காளர் விழிப்புணர்வு என, ஒவ்வொரு பணியும் வேகமாக முடிக்கப்பட்டு வருகிறது.வரும் ஜன., மாதம், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ள நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் விவரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி பணிகளை மேற்கொள்ளும் ஆசிரியர்கள், 'அப்சர்வர்'களாக பணியாற்றும், பொதுத்துறை மற்றும் வங்கி அதிகாரிகள் பட்டியல் தயாராகியுள்ளது.தேர்தல் பணியாற்றும் வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் விவரம் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தொகுதி வாரியாக, பணியாளர் விவரம் சேகரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது.தாசில்தார்கள் கூறியதாவது:'லோக்சபா தேர்தல் நெருங்குவதால், தேர்தல் கமிஷன் உரிய ஏற்பாடுகளை செய்து வருகிறது. மண்டல அலுவலர்கள், ஓட்டுச்சாவடி அலுவலர் உள்ளிட்ட, தேர்தல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். அதற்காக, அரசு அலுவலர் மற்றும் ஊழியர்கள், பள்ளி ஆசிரியர், வங்கி பணியாளர் விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. ஓட்டுச்சாவடி எண்ணிக்கைக்கு ஏற்ப, பணியாளர் தேர்வு செய்யப்படுகின்றனர். பறக்கும் படை, வீடியோ பதிவு குழு, செலவின கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு ஆகிய குழுக்களும் உருவாக்கப்படும். தேர்தல் பணியாளரின் போட்டோவுடன், முழு விவரத்தையும் சேகரித்து, 20ம் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X