பயனாளிகளை அச்சுறுத்தும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயனாளிகளை அச்சுறுத்தும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சின்னாளபட்டி, சின்னாளபட்டியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, சேதமடைந்த குடிநீர் தொட்டி, புதர் மண்டிய நிலையில் கொசுக்களின் புகழிடமாக மாறியுள்ளது.மதுரை வீட்டு வசதி வாரியத்தின் சார்பில், சின்னாளபட்டியில் தலா ஆயிரத்து 400, ஆயிரத்து 500 சதுரடி அளவுகளில், 77 வீடுகள் கட்டப்பட்டன. பல்வேறு நிலைகளில் விலை நிர்ணயித்து, விற்பனை நடந்தது. இதில் 29 வீடுகள், 3 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டன. சில வீடுகளில் மட்டுமே பயனாளிகள் வசிக்கின்றனர். இப்பகுதியில் போதிய குடிநீர், ரோடு, தெருவிளக்கு வசதிகள் இல்லை. சுற்றிலும் புதர் சூழ்ந்து, முட்செடிகள் மண்டியுள்ளன. கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகவும், இரவு நேரங்களில் சமூக விரோதச்செயல்கள் அரங்கேறும் பகுதியாக மாறியுள்ளது.இப்பிரச்னைகளால் ஒதுக்கீடு பெற்ற பயனாளிகளில் பலர், வீடுகளுக்கு குடி பெயர்வதில் தாமதம் காட்டி வருகின்றனர். வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் அலட்சியத்தால், சேதமடைந்த குடிநீர் தொட்டிகள், பாழடைந்த கட்டடங்கள், அடர்ந்த புதர்ச்செடிகள், தண்ணீர் தேங்கும் குழிகள் போன்றவை, கொசுக்களின் உற்பத்தி மையமாக மாறியுள்ளது. மாவட்ட நிர்வாகம், இப்பகுதியில் நிலவும் சுகாதாரக்கேட்டை தவிர்க்க, துரித நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X