'ரிலீஸ்' செய்ய முடியாமல் சிறு பட்ஜெட் படங்கள் தவிப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ரிலீஸ்' செய்ய முடியாமல் சிறு பட்ஜெட் படங்கள் தவிப்பு

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை:பட வெளியீட்டில், சங்க விதிகளை அனைவரும் கடைபிடிக்குமாறு, தயாரிப்பாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
தீபாவளிக்கு, விஜய் நடித்த, சர்கார் படம், தமிழகத்தில் மட்டும், 600 தியேட்டர்களுக்கு மேல் வெளியானது. இதனால், விஜய் ஆண்டனி நடித்த, திமிரு புடிச்சவன் படம் வெளியாகவில்லை. மேலும், சர்கார் படத்துடன் வெளியான, பில்லா பாண்டி, களவாணி மாப்பிள்ளை ஆகிய படங்களுக்கு, போதிய தியேட்டர்கள் கிடைக்காமல் நஷ்டம்அடைந்தன.
இந்நிலையில், வரும், 16ம் தேதி, சிறு படங்களுக்கான, தேதி ஒதுக்கப்பட்டது. அன்று, காற்றின் மொழி, செய், சித்திரம் பேசுதடி - 2, உத்தரவு மகாராஜா ஆகிய படங்களுக்கு, வெளியீட்டு அனுமதி கடிதம் தரப்பட்டுள்ளது.விஜய் ஆண்டனியின், திமிரு புடிச்சவன் படமும், 16ம் தேதி வெளியாவதாக, படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், செய் படத் தயாரிப்பாளர் உட்பட, சிறு தயாரிப்பாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, செய் படத்தின் நாயகன்,நகுல் கூறியதாவது:பட வெளியீட்டை ஒழுங்குமுறை படுத்த, தயாரிப்பாளர் சங்கம்,சில விதிமுறைகளை வகுத்துள்ளது.அதன்படி தான்,செய் படத்திற்கு, 16ம் தேதி ஒதுக்கி கொடுத்தனர். இப்படம், மார்ச் முதல், வெளியீட்டு தேதி கிடைக்காமல், தற்போது தான் தேதி கொடுத்துள்ளனர்.திடீரென வெளியாவதாக அறிவித்த, திமிரு புடிச்சவன் படத்தால், எங்கள் படத்தை வெளியிட முடியவில்லை.சித்திரம் பேசுதடி - 2 படத் தயாரிப்பாளர், 'இது, தற்கொலைக்கு சமம்' என கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் சங்கம், நல்ல தீர்வை தரும் என, நம்பியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார். இது தொடர்பாக, தயாரிப்பாளர் சங்கம் சார்பில், இன்று, பேச்சுவார்த்தை நடக்கிறது. அனுமதி கடிதம் இல்லாமல், படங்கள் வெளியானால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.அதன் அடிப்படையில், நவ., 16ல், அனுமதி கடிதம் இல்லாமல், விஜய் ஆண்டனி படம் வெளியானால், அவர் மீது, சங்க விதிப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X