4 ஸ்டேஷன்களுக்கு ஒரு இன்ஸ்பெக்டர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

4 ஸ்டேஷன்களுக்கு ஒரு இன்ஸ்பெக்டர்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

வேடசந்துார், வேடசந்துார் போலீஸ் ஸ்டேஷனில் காலியாக உள்ள இன்ஸ்பெக்டர் பணியிடத்தை விரைந்து நிரப்ப மாவட்ட போலீஸ் நிர்வாகம் முன்வர வேண்டும்.வேடசந்துார் தாலுகாவில், வேடசந்துார், கூம்பூர், எரியோடு, குஜிலியம்பாறை, வடமதுரை மற்றும் வடமதுரை மகளிர் ஸ்டேஷன்கள் உள்ளன. தாலுகா தலைநகரான வேடசந்துார் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்தான், கூம்பூர் ஸ்டேஷனையும் கூடுதல் பணியாக கவனிக்கிறார். இந்நிலையில் இங்கு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த கதிரவன், டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் சென்றுவிட்டார். இதனால் வேடசந்துார் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் பணியிடம் கடந்த இரு மாதங்களாக காலியாகவே உள்ளது.எரியோடு இன்ஸ்பெக்டர் கருப்புச்சாமி கூடுதல் பொறுப்பாக, வேடசந்துார், கூம்பூர் ஸ்டேஷன்களை கவனித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே குஜிலியம்பாறை ஸ்டேஷன் கூடுதல் பணியாக உள்ளதால், தற்போது 4 ஸ்டேஷன்களை கவனிக்கும் பொறுப்பு உள்ளது. இதனால் முக்கிய பிரச்னைகளுக்கு இன்ஸ்பெக்டரும், அவரை காண பொது மக்களும் அலைந்து திரிகின்றனர். வேடசந்துார் தாலுகா தலைநகராக உள்ளது மட்டுமின்றி, தேசிய நெடுஞ்சாலையும் இங்கு செல்வதால் அடிக்கடி சட்டம் ஒழுங்கு, விபத்துகள், பிரச்னைகள் எழுகின்றன.கடந்த காலத்தில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் பல, இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இன்ஸ்பெக்டர் பணியிடத்தை காலியாக வைத்திருப்பது பொது மக்களை எரிச்சலடைய செய்கிறது. இப்பகுதி மக்களின் நலன் கருதி இன்ஸ்பெக்டர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப மாவட்ட எஸ்.பி., சக்திவேல் முன்வரவேண்டும்.-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X