துணைவேந்தர் தேர்வு ஐகோர்ட் உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

துணைவேந்தர் தேர்வு ஐகோர்ட் உத்தரவு

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் பதவிக்கு, மூன்று பேரை பரிந்துரைப்பதற்கான தேர்வு நடவடிக்கைக்கு, தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

வேளாண் பல்கலை துணைவேந்தர் பதவிக்கு, மூன்று பெயர்களை பரிந்துரைக்க, மஹாராஷ்டிரா மாநிலம், கிரிஷி வித்யாபீட துணைவேந்தரான விஸ்வநாதா தலைமையில், குழு அமைக்கப் பட்டது. இதற்கான உத்தரவு, 2018 ஆகஸ்ட்டில் பிறப்பிக்கப்பட்டது.துணைவேந்தர் பதவிக்கு, நிர்ணயிக்கப்பட்ட தகுதி அடிப்படையில், விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
துணைவேந்தர் பதவிக்கு, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த, டாக்டர் வள்ளுவ பாரிதாசன் என்பவர் விண்ணப்பித்திருந்தார். இவரை, நேர்முகத் தேர்வுக்கு அழைக்காததால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.நேர்முகத் தேர்வுக்கு அழைக்க உத்தரவிடவும், தனது மனுவை பரிசீலிக்காமல், துணை வேந்தர் பதவிக்கு பரிந்துரைப்பதற்கான தேர்வு நடவடிக்கைக்கு தடை விதிக்கவும், மனுவில் கோரியிருந்தார்.
மனு, நீதிபதி எஸ்.விமலா முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல், எஸ்.ஆர்.ராஜகோபாலன் ஆஜரானார். துணைவேந்தர் பதவிக்கு பரிந்துரைப்பதற்கான தேர்வு நடவடிக்கைக்கு தடை விதிக்க, நீதிபதி மறுத்து விட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X