அ.தி.மு.க., கொடி கம்பம் அகற்ற மனு சேலம் கலெக்டர் பதிலளிக்க உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., கொடி கம்பம் அகற்ற மனு சேலம் கலெக்டர் பதிலளிக்க உத்தரவு

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:சேலம் மாவட்டம், பூலாவரி கிராமத்தில், பஸ் நிறுத்தம் முன் உள்ள, அ.தி.மு.க., கொடி கம்பத்தை அகற்ற கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பூலாவரி கிராமத்தைச் சேர்ந்த, சேகர் என்பவர் தாக்கல் செய்த மனு:எங்கள் கிராமத்தில், தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில், ஏழு லட்சம் ரூபாய் செலவில், நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. எந்த அனுமதியும் பெறாமல், பஸ் நிறுத்தம் முன், அ.தி.மு.க.,வினர், பெரிய கொடி கம்பம் நட்டுள்ளனர். இதனால், இந்தப் பகுதியில் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், கிராமத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொடி கம்பத்தை அகற்ற கோரி மனு அளித்துள்ளேன்; எந்த பதிலும் இல்லை. எனவே, கொடி கம்பத்தை அகற்ற, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள், எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. சேலம் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் அளிக்க, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை, வரும், 15ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X