நீர்நிலை பாதுகாப்பு அவசியம்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீர்நிலை பாதுகாப்பு அவசியம்!

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

'பறவையே எங்கு இருக்கிறாய்? பறக்கவே உன்னை அழைக்கிறேன்..!' என்ற சினிமா பாடலை கேட்கையில், நஞ்சராயன் குளம் நினைவுக்கு வருகிறது. வரிகளை நிஜமாக்குவது போல், குளத்திலுள்ள தண்ணீர் நஞ்சாகும் அளவுக்கு, கழிவுகள் கலந்து விட்டன.எனவேதான், 'நீர்நிலை ஒட்டிய பகுதிகளில், பறவைகளின் உருவத்தை, ஓவியமாக தீட்ட வேண்டும்' என, இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.விளை நிலங்கள், ஓடை, கால்வாய் உள்ளிட்ட இடங்களில், அரிய வகை பறவையினங்கள், வன உயிரினங்கள் வாழ்ந்து வந்தன. நகரமயமாக்கல், வன அழிவு, ஓடை, கால்வாய் ஆக்கிரமிப்பால், பறவையினங்களை பார்ப்பது, அரிதாகி இருக்கிறது.ஏரி, ஆறு, நீர்பிடிப்பு புல்வெளி, சதுப்பு நிலம், ஆறுகளின் முகத்துவாரம், கடற்கரை சமவெளி, கடல்நீர் மற்றும் நன்னீர் இணையும் பகுதிகளில், பறவைகள் அதிகளவில் வந்து செல்லும். குறிப்பிட்ட சீசனில், வெளிநாட்டு பறவைகளும், அதிகளவில், இந்த நீர்பிடிப்பு பகுதிகளுக்கு வந்து செல்லும்.இந்த வரிசையில், திருப்பூர் அருகே நஞ்சராயன் குளத்தில் முந்தைய காலங்களில் பறவையினம் அதிகளவில் காணப்பட்டது. தற்போது, அக்குளம், அழிவின் பிடியில் உள்ளது. இதனால், பறவைகள் வருவது குறைந்து போயிருக்கிறது.எனவே, பறவைகளை பாதுகாக்கும் பொருட்டும், அவற்றின் சிறப்பை உணர்த்தும் வகையிலும், வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், 'நீர் நிலைகளை பாதுகாத்தால் மட்டுமே, பறவையினங்களை பாதுகாக்க முடியும். எனவே, நீர்நிலை ஒட்டிய பகுதிகளில், பறவையினங்களின் உருவத்தை, ஓவியமாக வரைந்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,' என்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X