பன்றி காய்ச்சலுக்கு சிவகங்கையில் 2 பேர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பன்றி காய்ச்சலுக்கு சிவகங்கையில் 2 பேர் பலி

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில், பன்றிக்காய்ச்சலுக்கு, எல்.ஐ.சி., அலுவலர் உட்பட இருவர் பலியாயினர்.
சிவகங்கையை சேர்ந்த, எஸ்.ஐ.சி., அலுவலர் ரகுராமன்,54. காய்ச்சலால் சிவகங்கை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும், குணமடையாததால், மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ரத்த பரிசோதனையில், பன்றிக்காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று நாட்களாக அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று காலை இறந்தார்.காளையார்கோவிலை சேர்ந்தவர் சீனிவாசன், 84. இவர், 5ம் தேதி, மாலை, 4:00 மணிக்கு காய்ச்சலுக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரத்தப்பரிசோதனையில் பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரிந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு இறந்தார்.மதுரையில் இருவர் பலிமதுரை, கீழக்குயில்குடியை சேர்ந்த பாண்டி மகன் தரணிதரன்,11. இவர், 40 நாட்களுக்கு முன் விபத்தில் சிக்கினார். அவரை அரசு மருத்துவமனை யில் சேர்த்தனர். அவருக்கு காய்ச்சல் இருந்தது. ரத்த பரிசோதனையில் பன்றி காய்ச்சல் உறுதியானது. சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்றவர், நேற்று இறந்தார்.
விருதுநகரை சேர்ந்தவர் பழனி, 54. இவருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று இருந்தது. மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று இறந்தார். பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சலுக்கு, 13 பேர் பலியாகி உள்ளனர்.திருச்சியில் இருவர் பலிதிருச்சி மாவட்டம் மட்டுமின்றி அரியலுார், பெரம்பலுார், புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏற்கனவே, பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அரியலுார் மாவட்டம், செந்துறையை சேர்ந்த சுந்தரவேல், திருச்சி பாலக்கரையை சேர்ந்த ராணி ஆகியோர் மர்ம காய்ச்சலால் இறந்துள்ளனர். அவர்களுக்கு நிமோனியா பாதிப்பு இருந்ததால், உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X