குப்பை கொட்டும் குடோனாக மாறிய குட்டை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குப்பை கொட்டும் குடோனாக மாறிய குட்டை

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பல்லடம் வட்டார விவசாயிகள் வேதனைபல்லடம்:பல்லடம் அருகே, நீர் ஆதார குட்டை ஒன்று, கழிவுகள் கொட்டும் கிடங்காகி வருவது, விவசாயிகளிடம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. நீர் நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற தேவையான சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என, கடந்த ஆண்டு சென்னை ஐகோர்ட், தமிழக அரசுக்கு அறிவுறுத்தி இருந்தது.இருந்தும் அதற்கான முயற்சிகளை, மாவட்ட நிர்வாகங்கள் இதுவரை மேற்கொள்ளவில்லை. மாறாக, நீர் ஆதார குளம் குட்டைகள் ஆக்கிரமிப்புகள், மற்றும் கட்டட கழிவுகளால் நிறைந்து வருகின்றன. பல்லடம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, தெற்குப்பாளையம், முத்துநகரில், பழமையான குட்டை உள்ளது. ஏறத்தாழ, 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குட்டை, தெற்குப்பாளையம், நாரணாபுரம் சுற்றுவட்டார கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. மழை பொய்த்ததாலும், நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு காரணமாகவும், குட்டை புதர் மண்டி காணப்படுகிறது. சமூக அக்கறையற்ற சிலரின் தவறான செயல்பாடுகளால், கட்டட கழிவுகள், பாட்டில், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவை கொட்டப்பட்டு, குட்டை மாயமாகி வருகிறது. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: சில ஆண்டுக்கு முன், இந்த குட்டை சுற்றுவட்டார குக்கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வந்தது. அதனால், ஆண்டு முழுவதும் நிலத்தடி நீர் குறையாமல் இருந்தது. சமூக விரோதிகள் சிலரால், கழிவுகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டு, குட்டையின் ஒரு பாதி மாயமாகி விட்டது. மீதமிருக்கும் குட்டையையும், குப்பை கொட்டி மூடி வருகின்றனர். இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால், குப்பை கழிவுகள் கொட்டும் செயல், இன்னும் நீடித்து வருகிறது. குளம் குட்டைகளை காப்பாற்ற நாங்கள் முயற்சித்து வரும் நிலையில், ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், ஒரு நீர் ஆதார குட்டை, குப்பை கிடங்காகி வருகிறது. எனவே, கழிவுகளை கொட்டுவதை தடுப்பதுடன், முழுமையாக துார்வாரி மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X