மகசூல் இல்லாமல் ஏலக்காய் விற்பனைக்கு குவிவது எப்படி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மகசூல் இல்லாமல் ஏலக்காய் விற்பனைக்கு குவிவது எப்படி

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கம்பம், இடுக்கி ஏலத்தோட்டங்களில் செடிகளில் காய்கள் குறைவாக உள்ள நிலையில்விற்பனை மையங்களில் தினமும் லட்சக்கணக்கான கிலோ காய் விற்பனைக்கு பதிவாகிறது.இது எப்படி என கேட்கும் விவசாயிகள் ஸ்பைசஸ் வாரியம் நடவடிக்கை எடுக்கவலியுறுத்துகின்றனர்.இடுக்கி மாவட்டத்தில் விளையும் ஏலக்காய் விற்பனை செய்ய கம்பமெட்டு அருகில் புத்தடி மற்றும் போடியில் தலா ஒரு 'இ ஆக் ஷன்' சென்டரை, ஸ்பைசஸ் வாரியம் அமைத்துள்ளது. வாரத்தின் ஏழு நாட்களும் தினமும் இரண்டு நிறுவனங்கள் ஏலம் நடத்தும். தற்போது பெரும்பாலான ஏலத்தோட்டங்களில் காய் வரத்து முழுக்க இல்லாத நிலை உள்ளது. ஒருசில தோட்டங்களிலும் குறைவானஅளவே வரத்து உள்ளது. ஆனால் மையங்களில் தினமும் லட்சக்கணக்கான கிலோ காய் விற்பனைக்குபதிவு செய்யப்படுகிறது. இது எப்படி சாத்தியமாகிறது என விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.பழைய இருப்பு காய்களை பதிவு செய்து வரி ஏய்க்கத்தான் இவ்வாறு செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இது தொடர்பாக நவ. 8 ல் கொச்சியில் ஸ்பைசஸ் வாரியம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் தரப்பில்புகார் கூறப்பட்டுள்ளது. இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X