அட்சய பாத்திரமாக மாறிய ஆண்டிபாளையம் குளம்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அட்சய பாத்திரமாக மாறிய ஆண்டிபாளையம் குளம்!

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாக, ஆண்டிபாளையம் குளம் மாறிவிட்டது.கடந்த, 150 நாட்களை கடந்து, குளத்திலிருந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால்,விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல் மற்றும், 'வெற்றி' அமைப்பினரின் விடாமுயற்சியால், ஆண்டிபாளையம் குளம் புனரமைக்கப்பட்டது. பொதுமக்களின் கரசேவையுடன், குளம் துார்வாரி சுத்தம் செய்யப்பட்டது. கருங்கற்கள் பதிக்கப்பட்டு, குளக்கரையும் பலப்படுத்தப்பட்டது.மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கியதில், குளக்கரையில், பொழுதுபோக்கு மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது. பறவைகள் வந்து செல்லும் வகையில், குளத்துக்குள், இரண்டு மண் திட்டு அமைக்கப்பட்டு, மூங்கில் மற்றும் பழ மரங்கள் வளர்க்கப்பட்டன. ஆண்டு முழுக்க, குளத்தில் தண்ணீர் நிற்கும் அளவுக்கு, குளம் ஆழப்படுத்தப்பட்டது. இருப்பினும், தண்ணீர் இருப்பு, 60 சதவீதம் அளவுக்கு குறைந்த போதும், கோடை மழை கருணை காட்டியதால், அணை நிரம்பியது. அதன்பின், மே மாத இறுதியில் பெய்த மழை, தென் மேற்கு பருவமழையால் குளம் நிரம்பியது.கடந்த, ஜூன் மாதத்தில் இருந்து குளத்தின் உபரிநீர் வெளியேற துவங்கியது. பொதுவாக, குளம் நிரம்பும் பட்சத்தில், அதிகபட்சம், 30 முதல், 50 நாட்கள் வரை மட்டுமே, உபரிநீர் வெளியேறுவது வழக்கம். இம்முறை, இதுவரை இல்லாத நிகழ்வாக, 150 நாட்களை கடந்து, உபரிநீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.விவசாயிகள் கூறுகையில்,'ஆண்டிப்பாளையம் குளம், திருப்பூர் மாநகராட்சிக்குள் இருந்தும், கழிவுநீர் கலக்காமல், சுத்தமாக இருக்கிறது. நொய்யல் தடுப்பணைகளில் இருந்து, இருவேறு வாய்க்கால்களில் தண்ணீர் கிடைத்து கொண்டிருக்கிறது. நொய்யலில் சீரான வெள்ளம் வந்து கொண்டிருப்பதால், தண்ணீர் சிறிதும் வீணாகாமல், குளத்துக்கு வந்து, உபரி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X