'சுதந்திரமாக செயல்பட முடிவதில்லை!'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'சுதந்திரமாக செயல்பட முடிவதில்லை!'

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

நுண்ணறிவு பிரிவு போலீசார் புலம்பல்திருப்பூர், நவ. 11-'சட்டம்-ஒழுங்கு போலீஸ் அதிகாரிகளின் தலையீடு அதிகமாக இருப்பதால், சுதந்திரமாக செயல்பட முடிவதில்லை,' என்று, திருப்பூர் மாநகர நுண்ணறிவு பிரிவு போலீசார், புலம்புகின்றனர்.திருப்பூர் மாவட்டத்தில், மாநகரம் மற்றும் மாவட்ட போலீஸ் என, இரு பிரிவுகளாக செயல்படுகிறது. நடைபெறும் குற்ற சம்பவம், அதன் பின்னணி, அவற்றின் மீதான போலீசார் நடவடிக்கை என்ன, அரசியல் மற்றும் பிற அமைப்பினரின் நடவடிக்கை, சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து நுண்ணறிவு பிரிவு (ஐ.எஸ்.,) போலீசார் கண்காணித்து, கமிஷனருக்கு அறிக்கை அளிப்பர். திருப்பூரில் பணியாற்றி வரும் ஐ.எஸ்., போலீசார், ஸ்டேஷன் குறித்து, இன்ஸ்பெக்டர் மற்றும் ஸ்டேஷனில் பணியாற்றும் மற்ற போலீசாரின் நடவடிக்கை, வைட்டமின் 'ப' வாங்குகின்றனரா? ஸ்டேஷன் எல்லைக்குள் நடக்கும் லாட்டரி, கஞ்சா, மதுவிற்பனை உள்ளிட்ட சட்ட விரோதமான செயல்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் உள்ளிட்டவை கண்காணித்து முன்கூட்டியே, தங்களது ஐ.எஸ்., இன்ஸ்பெக்டரிடம் தெரிவித்து, அவர் மூலமாக கமிஷனருக்கு தகவல் செல்வது வழக்கம். இந்த பிரிவு முற்றிலும், கமிஷனரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மாதந்தோறும் இரண்டு, மூன்று முறை பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கமிஷனர் தலைமையில் நடப்பதும் வழக்கம்.போலீசார் புலம்பல்கடந்த சில மாதங்களாக, இப்பிரிவில், கமிஷனரை காட்டிலும், மற்ற போலீசாரின் தலையீடு அதிகமாக இருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்டு, ஏதாவது சட்ட விரோத செயல்கள் நடப்பதாக சம்பந்தப்பட்ட ஐ.எஸ்., போலீசார் 'ரிப்போர்ட்' கொடுத்தால் கமிஷனர் காதுக்கு சென்று வருவதற்குள், துணை மற்றும் உதவி கமிஷனர்களுக்கு தகவல் 'பறந்து' விடுகிறது. உடனே, சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரை கண்டிப்பதாக கூறி, 'அலர்ட்' செய்து விடுகின்றனர். ஐ.எஸ்., பிரிவில் எடுக்க கூடிய முடிவுகள் கூட, உதவி கமிஷனர்களிடம் கலந்து ஆலோசித்து எடுக்கும் நிலைக்கு, ஐ.எஸ்., பிரிவின் நிலைமை ஆகி விட்டது. இதை சில ஐ.எஸ்., போலீசார் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு, 'ரிப்போர்ட்' கொடுத்தால், நடவடிக்கையும் எடுக்க போவதில்லை, தேவையின்றி, இன்ஸ்பெக்டர், போலீசாரை ஏன் பகைத்து கொள்ள வேண்டும் என்று, தனி ராஜங்கத்தை நடத்த ஆரம்பித்து விட்டனர். இதனால், திருப்பூரில் பெயரளவில் தான் ஐ.எஸ்., பிரிவு செயல்படுவதாக ஸ்டேஷன் போலீசார் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்ததில், கிடைத்த விவரம் வருமாறு: ஐ.எஸ்., போலீசாருக்கு வரும் தகவல் கசிந்து, ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு தெரிந்து விடுகிறது. உடனே, பதிவில் குறிப்பிடப்படும் இடத்துக்கு, போலீசாரை அனுப்பி, எச்சரிக்கை செய்யும் வேலையும் தொடர்ந்து நடக்கிறது. மேலும், சில முக்கிய முடிவுகளை எடுக்கும் போது, சம்பந்தமில்லாத சில அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்பதும் சகஜமாகி விட்டது.இதனால், சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்டு நடக்கும் சட்ட விரோத சம்பவம் குறித்து ஸ்டேஷன் ஐ.எஸ்., போலீசார் தகவல் தெரிவிக்க முடியாமல் தடுமாறி வருகின்றனர். அப்படி தெரிவிக்கும் பட்சத்தில், ஐ.எஸ்., போலீசாருக்கு தெரியாமல் எதுவும் நடக்காது என, அவர்களை நோக்கி, கைகாட்டி விடுகின்றனர். இந்த விஷயத்தில் கமிஷனர் 'கறாரான' நடவடிக்கை எடுத்து, ஐ.எஸ்., போலீசாரின் செயல்பாடுகளை, முற்றிலும், தனது கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

-காத்திருக்கும் ஆபத்து!பல்வேறு மாநில மற்றும் வங்கதேசம், நேபாளம், நைஜீரியர் நாட்டை சேர்ந்தவர்கள், திருப்பூரில் தங்கி பனியன் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன் மாவோயிஸ்ட், ஐ.எஸ்., ஆதரவு தீவிரவாதி பிடிபட்டது, எவ்வித ஆவணமின்றி, தங்கியிருந்த வங்கதேசம், நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்கள் கைது, என, திருப்பூர் ஒரு 'சென்சிட்டிவ் சிட்டி'யாக மாறி விட்டது என்பதில், எந்த சந்தேகமில்லை.மேலும், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கியுள்ளனர். இவர்களும், அவ்வப்போது, குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், திருப்பூரில் 'கிரைம் ரேட்' நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது.எனவே, பல ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணியை ஈட்டித்தரும், 'டாலர் சிட்டியை பாதுகாக்க வேண்டிய, மாபெரும் கடமை, போலீசாருக்கு இருக்கிறது. இவ்விஷயத்தில், கமிஷனர் கூடுதல் கவனம் கொடுத்து, நுண்ணறிவு போலீஸ் பிரிவை பலப்படுத்த வேண்டும். இதுகுறித்து கமிஷனர் மனோகரனிடம் கேட்டதற்கு, ''இந்த விஷயம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்துகிறேன். அதன் முடிவில், உரிய நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X