கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம்: மேட்டுப்பாளையத்தில் ஏற்பாடு தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம்: மேட்டுப்பாளையத்தில் ஏற்பாடு தீவிரம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம்: மேட்டுப்பாளையத்தில் ஏற்பாடு தீவிரம்

மேட்டுப்பாளையம்:கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், கோவில் யானைகள் புத்துணர்வு முகாம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை, அறநிலையத் துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தமிழக அரசு சார்பில், ஒவ்வொரு ஆண்டும் யானைகள் புத்துணர்வு நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டு மேட்டுப்பாளையத்தில் நடந்த முகாமில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோவில்கள் மற்றும் மடங்களில் வளர்க்கும், 33 யானைகள் பங்கேற்றன. அதேபோன்று, இந்தாண்டும் யானைகள் முகாம் நடத்த ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் யானைகள் முகாம் குறித்து, ஹிந்து சமய அறநிலையத் துறை இணை கமிஷனர் ஹரிபிரியா தலைமையில் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. வனம், கால்நடை பராமரிப்புத் துறையினரும் பங்கேற்றனர்.கூட்டத்தில் பேசிய அதிகாரிகள், 'இந்தாண்டு, 48 நாட்கள் முகாம் நடக்கிறது.
வழக்கம் போல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். 'முகாம் நாட்களில் பணியாளர்கள் யாரும் விடுப்பு எடுக்காமல் வேலை செய்ய வேண்டும். கடந்தாண்டில் என்னென்ன குறைகள் இருந்ததோ, அது இந்தாண்டு நிவர்த்தி செய்யப்பட வேண்டும்' என்றனர்.இந்தாண்டுக்கான முகாம், இம்மாதம் கடைசி வாரம் அல்லது டிச., மாதம் முதல் வாரத்தில் துவக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X