கடலில் குளித்த பல்கலை., மாணவர் மாயம் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலில் குளித்த பல்கலை., மாணவர் மாயம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 கடலில் குளித்த பல்கலை., மாணவர் மாயம்

விழுப்புரம்:கோட்டக்குப்பம் அருகே, கடலில் குளித்தபோது, காணாமல் போன பல்கலைக் கழக மாணவரை, போலீசார் தேடிவருகின்றனர்.
அசாம் மாநிலம், திப்ருகார்ட் மாவட்டத்தை சேர்ந்தவர் ரீத்துராஜ் போரா,25; இவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், எம்.பி.இ.டி., - உடற்கல்வி மற்றும் விளையாட்டு பிரிவில்,இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை, 4:30 மணிக்கு கோட்டக்குப்பம் அருகேவுள்ள தந்திராயன்குப்பம் கடற்கரையில், நண்பர்கள், 18 பேரோடு சேர்ந்து கடலில் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கிய ரீத்துராஜ் போரா, கடலில் இழுத்து செல்லப்பட்டார். அதைக் கண்டு திடுக்கிட்ட அவரது நண்பர்கள் ரீத்துராஜ் போராவை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அதற்குள் அவர் கடலினுள் இழுத்து செல்லப்பட்டார்.தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீசார், அப்பகுதி மீனவர்கள் உதவியுடன் கடலில் மாணவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X