புதுச்சேரி கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை: தமிழக அரசு கைவிரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதுச்சேரி கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை: தமிழக அரசு கைவிரிப்பு

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த, புதுச்சேரி மாநில விவசாயிகளுக்கு, தமிழக அரசின் ஊக்க தொகை கிடைக்காததால், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகள், 2013 - 14 முதல் தொடர்ந்து, நான்கு ஆண்டுகளாக மாநில அரசுக்கு கூடுதல் விலையை அறிவிக்க அதிகாரமில்லைஎன கூறி, மத்திய அரசு அறிவிக்கும் விலையை மட்டுமே வழங்கி வருகின்றன. அதன்படி கடந்த ஆண்டுக்கு மத்திய அரசுடன் ஒன்றுக்கு, 2,550 ரூபாய், அறிவித்தது. அந்த விலையை தனியார் ஆலைகள் வழங்குகின்றன.
இதற்கிடையே சட்டசபையில்,'கரும்பு டன் ஒன்றுக்கு, 2,750 ரூபாய் உறுதி செய்யும் வகையில், தனியார் ஆலைகள் வழங்கிய தொகையான, 2,550 ரூபாய் போக மீதி, 200 ரூபாயை தமிழக அரசு நேரடியாக விவசாயிகள் வங்கிக் கணக்கில் செலுத்தும்' என துணை முதல்வர் அறிவித்தார். அதன்படி, நேற்று நெல்லிக்குப்பம் இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலைக்கு, 2017 - 18ம் ஆண்டில் , 4.42 லட்சம் டன் கரும்பு சப்ளை செய்த விவசாயிகள், 5,603 பேருக்கு மட்டும் டன்னுக்கு, 200 ரூபாய் வீதம், 8.84 கோடியை, அவர்களது வங்கி கணக்கில், நேரடியாக தமிழக அரசு வரவு வைத்தது.
ஆனால், நெல்லிக்குப்பம் இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலைக்கு சொந்தமாக புதுச்சேரி மாநிலம், அரியூரில் ஒரு சர்க்கரை ஆலை உள்ளது. அந்த ஆலை இயங்காததால் அங்கிருந்து, 92 ஆயிரம் டன் கரும்பை, நெல்லிக்குப்பத்திற்கு கொண்டு வந்தனர்.புதுச்சேரி மாநிலத்திற்கு, ஊக்க தொகை வழங்க முடியாது என, தமிழக அரசு கூறிவிட்டது. இதனால், புதுச்சேரியில் இருந்து கரும்பு சப்ளை செய்த விவசாயிகள், ஊக்க தொகை கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துஉள்ளனர்.
தமிழக அரசு வழங்கியது போன்று, புதுச்சேரி அரசு ஊக்க தொகை வழங்க வேண்டும் அல்லது தமிழக அரசிடம் பேசி எங்களுக்கும் ஊக்கத் தொகை பெற்றுத் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X