தலைமை தேர்தல் அதிகாரியை மிசோரமில் மாற்ற ஒப்புதல்| Dinamalar

தலைமை தேர்தல் அதிகாரியை மிசோரமில் மாற்ற ஒப்புதல்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

புதுடில்லி:மிசோரம் தலைமை தேர்தல் அதிகாரியை மாற்ற, தேர்தல் கமிஷன் ஒப்புக் கொண்டுள்ளது.புதிய தேர்தல் அதிகாரியாக நியமிக்க, மூன்று பேரை பரிந்துரைக்குமாறு, மாநில தலைமை செயலரிடம், தேர்தல் கமிஷன் கேட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மிசோரமில், முதல்வர் லால் தன்ஹவாலா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. ௪௦ உறுப்பினர்கள் பலம் உடைய மிசோரம் சட்டசபைக்கு, ௨௮ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல், நாளையுடன் முடிகிறது.மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருப்பவர், எஸ்.பி. ஷஷாங்க்.
மாநில முதன்மை செயலராக இருந்த, சவுன்கோ, தேர்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் தலையிடுவதாக, தேர்தல் கமிஷனிடம், தலைமை தேர்தல் அதிகாரி ஷஷாங்க் குற்றம் சாட்டினார்.இதையடுத்து, சவுன்கோவை, பணியிலிருந்து விடுவித்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதற்கு மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
தலைமை தேர்தல் அதிகாரியை மாற்ற கோரி, பல்வேறு சமூக அமைப்புகள், மாணவர்கள் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன, இதனால், வேட்பு மனு தாக்கல் பணி பாதிக்கப்பட்டது,


கோரிக்கை



மேலும், மிசோரமில், ௧௯௯௭ல் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட, ப்ரூ சமுகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், திரிபுராவுக்கு குடிபெயர்ந்தனர். அங்கு முகாம்களில், அவர்கள் தங்கியுள்ளனர்.'அவர்களை, திரிபுரா வாக்காளர் பட்டியலில் சேர்க்க கூடாது; மிசோரம் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்' என்ற, கோரிக்கையை, 2014ல், தேர்தல் கமிஷன் ஏற்றது.இந்நிலையில், மிசோரம் சட்டசபை தேர்தலில் ஓட்டுப்போட, திரிபுரா முகாம்களில் தங்கியுள்ள ப்ரு சமூகத்தினருக்கு, அங்கேயே சிறப்பு ஏற்பாடு செய்யப்படும் என, தலைமை தேர்தல் அதிகாரி ஷஷாங்க் தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ப்ரு சமூகத்தினர், திரிபுராவில் முகாம்களில் தங்கியிருப்பவர்கள், மிசோரமில், அவர்கள் சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடியிலேயே, ஓட்டுப்போட ஏற்பாடு செய்ய வேண்டும் என, கோரினர்.பரிந்துரைஇதையடுத்து, ஷஷாங்கை டில்லிக்கு அழைத்து, தேர்தல் கமிஷன் விசாரித்தது. மேலும், துணை தேர்தல் கமிஷனர், சுதீப் ஜெயின், மிசோரம் சென்றார். தலைநகர் அய்ஸ்வாலில், தலைமை செயலர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி ஷஷாங்கை மாற்ற, தேர்தல் கமிஷன் சம்மதம் தெரிவித்துள்ளது. மேலும், தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிப்பதற்கு, மூன்று அதிகாரிகள் பெயரை பரிந்துரை செய்யும்படி, மாநில தலைமை செயலரிடம், தேர்தல் கமிஷன் கேட்டு கொண்டுள்ளது.அவர் பரிந்துரை செய்யும் வரை, தலைமை தேர்தல் அதிகாரியாக, ஷஷாங்க் நீடிப்பார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், திரிபுராவில் உள்ள ப்ரூ சமூகத்தினர், மிசோரமில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் ஒட்டளிக்கவும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X