நடிகர்கள் மீது பாலியல் புகார் நடிகை நிகாரிகா, 'பகீர்'| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நடிகர்கள் மீது பாலியல் புகார் நடிகை நிகாரிகா, 'பகீர்'

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மும்பை:பாலிவுட் நடிகையும், முன்னாள் இந்திய அழகியுமான, நிகாரிகா சிங், திரைத்துறையினர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
சக நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள், தன்னிடம் அத்துமீறியதாக, புகார் எழுப்பி உள்ளார்.பிரபல பாலிவுட் நடிகை நிகாரிகா சிங், 36. ஹிந்தி மொழிப் படங்களில் நடித்துள்ள இவர், 2005ல், 'பெமினா மிஸ் இந்தியா' பட்டம் வென்றார். அதன் தொடர்ச்சியாக, இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.
இந்நிலையில், திரைத்துறையை சேர்ந்த, நவாசுதீன் சித்திக், சாஜித் கான் மற்றும் பூஷண் குமார் ஆகியோர், தனக்கு, பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்ததாக, சமூக வலைதளம் மூலம் வேகமாக பரவி வரும், 'மீ டூ' வில் குற்றச்சாட்டை எழுப்பி உள்ளார்.
இது குறித்து, நடிகை நிகாரிகா கூறியிருப்ப தாவது:நடிகை என்ற முறையில், என்னிடம் பலர் அத்துமீற முயன்றனர். திரைத்துறையை சேர்ந்த சிலரே, அநாகரிகமான வகையில் நடக்க முற்பட்டனர். எனக்கு பட வாய்ப்பு அளிப்பதாக கூறிய, இயக்குனர் பூஷண் குமார், என்னை படுக்கைக்கு அழைத்தார். அதற்கு சம்மதிக்காத நான், அவருக்கு தக்க பதிலடி கொடுத்தேன்.
என்னுடன் நடித்த, நவாசுதீன் சித்திக், என்னை காதலிப்பதாக கூறினார். என்னை திருமணம் செய்ய விரும்புவதாக கூறி, என்னை கட்டி அணைக்க முயன்றார். அவரின் கரங்களை தட்டி விட்டு, தப்பித்தேன்.அதன்பின், மூன்று ஆண்டுகள் கழித்து இருவரும் சந்தித்த போது, அவருடன் நட்பு ரீதியில் பேசினேன்.ஆனால், அப்போதும், அவர் என்னிடம் காமத்தை தான் எதிர்பார்த்தார்; ஆனால், நான் அதற்கு சம்மதிக்கவில்லை. இவர்களைப் போல், திரைத்துறையை சேர்ந்த மேலும் பலர், என்னிடம் தவறாக நடக்க முயன்றனர்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X