சென்னையில் போக்குவரத்து மாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் போக்குவரத்து மாற்றம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை:சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ., சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று, டி - 20 கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதையடுத்து, மாலை, 5:00 மணி முதல் இரவு, 9:30 மணி வரை, அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
• பெல்ஸ் சாலை, தற்காலிகமாக ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட உள்ளது. பாரதி சாலை சந்திப்பு, 'நோ என்ட்ரி' யாகவும், வாலாஜா சாலை சந்திப்பு பகுதி, 'என்ட்ரி'யாகவும் மாற்றப்பட்டுள்ளது. இரவில், கிரிக்கெட் போட்டி முடிந்த பின், வழக்கம் போல் போக்குவரத்து அனுமதிக்கப்படும்
• காமராஜர் சாலையில் இருந்து, பாரதி சாலை நோக்கி வரும் வாகனங்களில், மாநகர பேருந்து மற்றும் உரிய அனுமதி அட்டை உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். கெனால் சாலை, பாரதி சாலையிலிருந்து ஒரு வழிப்பாதையாகவும், வாலாஜா சாலையிலிருந்து, 'நோ என்டரி'யாகவும் மாற்றப்பட்டு உள்ளது
• அண்ணா சாலையிலிருந்து வாலாஜா சாலைக்கு வரும் வாகனங்கள், 'எம், பி, டி, டபிள்யூ' ஆகிய எழுத்துக்கள் கொண்ட அனுமதி அடையாள அட்டை உடைய வாகனங்கள், வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, பாரதி சாலை மற்றும் கெனால் சாலை வழியாக, அந்தந்த வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம்.
மேலும், பி மற்றும் ஆர் ஆகிய எழுத்துக்கள் கொண்ட அனுமதி அட்டை உடைய வாகனங்கள், வாலாஜா சாலை வழியாக, வாகன நிறுத்துமிடத்திற்கு செல்லலாம்
• போர் நினைவுச் சின்னம், காந்தி சிலை வழியாக வரும், 'எம், பி, டி, டபிள்யூ' எழுத்துக்கள் கொண்ட அனுமதி அட்டை உடைய வாகனங்கள், மாநகர பேருந்துகள், பாரதி சாலை வழியாக, கெனால் சாலையில் அந்தந்த வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம்.
மேலும், அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள் அனைத்தும், பொதுப்பணித் துறை அலுவலகம் எதிரே உள்ள கடற்கரை உட்புறச் சாலையில் நிறுத்திக் கொள்ளலாம்
• அனுமதி அட்டை இல்லாமல், அண்ணா சாலையில் இருந்து வரும் இருசக்கர வாகனம் மற்றும் கார்கள், வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை வழியாக கடற்கரை உட்புறச் சாலையில் சென்று வாகனங்களை நிறுத்தலாம்.
போர் நினைவுச் சின்னத்திலிருந்து வரும் வாகனங்கள், காமராஜர் சாலை வழியாக பொதுப்பணித் துறை அலுவலகம் சென்று கடற்கரை உட்புறச்சாலை யில் வாகனங்களை நிறுத்தலாம்.மேலும், காந்தி சிலையில் இருந்து வரும் வாகனங்கள், காமராஜர் சாலை வழியாக பொதுப்பணித்துறை அலுவலகம் சென்று கடற்கரை உட்புறச்சாலையில் வாகனங்களை நிறுத்தலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X