வீடு புகுந்து பெண்ணிடம் செயின்பறிப்பு: ஆசாமிக்கு வலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீடு புகுந்து பெண்ணிடம் செயின்பறிப்பு: ஆசாமிக்கு வலை

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பண்ருட்டி:பண்ருட்டி அருகே வீடு புகுந்து பெண்ணிடம் தாலிச் செயினை அறுத்துக் கொண்டு தப்பியோடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த மேல்காங்கேயன்குப்பம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் இளங்குமார். இவரது மனைவி மஞ்சுளா, 32; இவரது அக்கா மகள் தனலட்சுமி, 19; இருவரும் நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணியளவில் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர்.அப்போது, இரண்டு மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்தனர். சத்தம் கேட்டு விழித்த மஞ்சுளாவிடம் கத்தியைக் காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி 4 சவரன் தாலிச் செயினையும், தனலட்சுமியின் ஒரு சவரன் செயினையும் அறுத்துக் கொண்டு தப்பியோடினர். இதுகுறித்த புகாரின் பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X