வீட்டின் கதவை உடைத்து திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டின் கதவை உடைத்து திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 வீட்டின் கதவை உடைத்து திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

பெண்ணாடம்:பெண்ணாடத்தில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பெண்ணாடம் காமராஜர் தெரு, முதல் வீதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் மனைவி சுதாமதி, 68; இவரது மகன் பாஸ்கர், 47; வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சுதாமதி தனது மருமகள் அன்பரசி மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.கடந்த 7ம் தேதி தனது குடும்பத்துடன் சென்னையில் உள்ள வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று காலை 6:00 மணியளவில், சுதாமதி வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்திருப்பதாக சுதாமதிக்கு தகவல் தெரிவித்தனர்.உடன் அங்கிருந்து பெண்ணாடம் வீட்டிற்கு வந்து பார்த்ததில், பீரோவில் இருந்த 2 சவரன் நகை, 20 ஆயிரம் ரூபாய் மற்றும் அரை கிலோ எடையுள்ள வெள்ளி லட்சுமி விளக்கு உள்ளிட்ட பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது.தகவலறிந்து வந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, சப் இன்ஸ்பெக்டர்கள் வீரசேகரன், ராதாகிருஷ்ணன் தடயங்களை சேகரித்தனர்.பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X