அறிவை அள்ளித்தரும் அருங்காட்சியகம் பழமைகளை பறைசாற்றும் பாரம்பரியம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அறிவை அள்ளித்தரும் அருங்காட்சியகம் பழமைகளை பறைசாற்றும் பாரம்பரியம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ருதுநகர் விருதுநகரில் பழம்பொருள் அருங்காட்சியகம் உள்ளது. விருதுநகரில் பொழுதுபோக்கு இல்லை என்ற குறையை போக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் திகழ்கிறது எனலாம் . இது பழம்பொருள் அருங்காட்சியகமாக இல்லாமல் பல்நோக்கு அருங்காட்சியகமாக அமைகிறது. விருதுநகர் மாவட்டம் தொழில் நகரம் என்பதை பறைசாற்றும் வகையில் சிமென்ட் , பட்டாசு, பிரின்டிங் குறித்த மாதிரிகளும் இடம்பெற்றுள்ளன. 2000 ஆயிரம் ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி, போர்கருவிகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன . இதே போன்று தொன்மையான ராமாயணம், மகாபாரதம், திருவாய்மொழி குறித்த ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருவதோடு,,ரவிவர்மாவின் ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன.இதோடு இங்கு ,அறிமுகக் கூடம், மானிடவியல் கூடம், தொல்லியல் கூடம், ஓவியக் கூடம், புவியியல் கூடம், இயற்கை அறிவியல் கூடம் என 6 கூடங்கள், வரலாற்று சிறப்புமிக்க தொன்மையான சான்றுகளும் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை சிவன் கோயில் விநாயகர் தேர் மரசிற்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவை கி.பி.1850 ம் ஆண்டை சார்ந்ததாகும். ராஜபாளையத்தில் வசித்த வட இந்திய ராஜபுத்திரர்கள் உடன்கட்டை ஏறியதற்கான சான்றுகளை குறிக்கும் விதமாக ராஜபாளையம் சோலைசேரி கிராமத்தில் இருந்து பெறப்பட்ட சதிக்கல் , தஞ்சாவூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து பெறப்பட்ட கோடரி, வளரி, கத்தி ,உடைவாள், ஈட்டி இடம் பெற்றுள்ளது. இதில் வளரி மிகவும் வித்தியாசமானது. 'பூமராங்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வளரி போர் காலங்களில் எதிரியை தாக்க பயன்படும் நுட்பமான ஆயுதம் . இதை போரில் வீச , அது மீண்டும் அதே இடத்திற்கு வரும் வல்லமை படைத்தது. இது போன்ற பல சிறப்புகளுடன் பல்நோக்கு அருங்காட்சியகமாக திகழும் இதை, வாரத்தில் வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை பார்வையிடலாம்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X