மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திரண்டதால் பணி நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திரண்டதால் பணி நிறுத்தம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பண்ருட்டி:பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் ஊராட்சி பெண்ணையாற்றில் மணல் குவாரிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மணல் அள்ளும் பணி நிறுத்தப்பட்டது.பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் ஊராட்சி எல்லைக்குட்பட்ட பெண்ணையாற்றில் பொதுப்பணித் துறை சார்பில் மணல் குவாரி துவங்கிட சுற்றுசுழல் ஆணையம் கடந்த மே 15ம் தேதி அனுமதி வழங்கியது. தொடர்ந்து கலெக்டர் கடந்த ஜூன் 20ம் தேதி அனுமதி வழங்கினார்.எனதிரிமங்கலம் மணல் குவாரி இரு ஆண்டுகள் செயல்படும். 12 ஏக்கர் பரப்பளவில் 48,000 எம்.3 அளவில் மணல் அள்ளுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.குவாரி அமைப்பது குறித்து கடந்த மாதம் 23ம் தேதி பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் அப்பகுதி மக்கள் மணல் குவாரி அமைக்கக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அதற்கு பதில் அளித்த அதிகாரிகள், கூட்டத்தில் நடந்த நிகழ்வு குறித்து கலெக்டர் பார்வைக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகலில் திடீரென எனதிரிமங்கலம் பெண்ணையாற்றில் இருந்து லாரிகளில் மணல் அள்ளப்பட்டு பண்ருட்டி அடுத்த ஏரிப்பாளையம் மெயின்ரோட்டில் மணல் குவிக்கப்பட்டு விற்பனைக்காக தயார் செய்யும் பணி நடைபெற்றது.தொடர்ந்து நேற்றும் 10க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் அள்ளப்பட்டு குவிக்கப்பட்டு பணி தொடர்ந்தது. இதற்கு எனதிரிமங்கலம், காவனுார், அக்கடவல்லி, உளுத்தாம்பட்டு, பைத்தாம்பாடி, சத்திரம், வேலங்காடு உள்ளிட்ட 7 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர்.இதுகுறித்து தகவலறிந்த காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் குமாரய்யா, புதுப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.வருவாய்த்துறை சார்பில் மக்களிடம் கருத்து கேட்பு நடத்திய பின் குவாரி இயக்குவது குறித்து முடிவு செய்வதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X