சமூக விரோதிகளால் அழியும் பறவையினங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சமூக விரோதிகளால் அழியும் பறவையினங்கள்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிள்ளை:கிள்ளை பகுதியில் தொடரும் பறவைகள் வேட்டையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பிச்சாவரம் வனப்பகுதிக்கு நவம்பரில் இருந்து பிப்ரவரி மாதங்களில் வெளிநாட்டு பறவைகள் வருவது வழக்கம். இப்பகுதியில் 166 வகையான பறவைகள் வந்து செல்வதாக பறவைகள் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளார்.கிள்ளை, குச்சிப்பாளையம், கீழச்சாவடி, தில்லைவிடங்கன், நஞ்சை மகத்துவாழ்க்கை, பின்னத்துார் உள்ளிட்ட கிராமங்களில் வயல்களில் நடவுப்பணிகள் துவங்கியுள்ளதால் உள்நாட்டு பறவையினங்களான நாரை, கொக்கு, மடையான், ஆக்காட்டி, கவுதாரி, உள்ளான் உள்ளிட்ட பறவையினங்களும் அதிகளவில் மானவாரியாக விதை நேர்த்தி செய்துள்ள வயல்களில் இறைத் தேடி வருகின்றன.இந்த பறவையினங்களை சமூக விரோதிகள் கவட்டை உள்ளிட்டவைகளால் வேட்டையாடி வருகின்றனர். பறவையினங்களை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X